Wednesday, 20 April 2011

அந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா



கோகிலா வீட்டைப் பூட்டிக்கொண்டு படி இறங்கினாள்.
பக்கத்து வீட்டு நீலா மாமி கேட் அருகேயே நின்றிருந்தாள்.
“மாமி அவர் அசந்து தூங்கிண்டிருக்கார்.தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு கதவை வெளிலே பூட்டிண்டு வந்துட்டேன். நான் வர ஒரு மணி நேரம் ஆகும். ஒண்ணு ரெண்டு தரம் ஜன்னல் வழியா எட்டிப் பாருங்கோ. கதவைத் திறந்துண்டு பெட் ரூமுக்குள்ள போயி பாக்க வேண்டாம்.  நான்தான்னு நினைச்சி கையை பிடிச்சி இழுத்துடுவார். அவர் எழுந்தார்ன்னா வீட்டைத் திறந்து விட்டு சாவியை அவரண்ட குடுத்துடுங்கோ. நான் சொன்னேன்னு சொல்லுங்கோ. கோபிச்சிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்கோ. முடிஞ்சா காபி போட்டு குடுங்கோ”
மாமி சாவியை வாங்கிக் கொண்டாள்.
கோகிலா போன பிறகுதான் அன்று வியாழக் கிழமை, ராகவேந்திர சுவாமி கோயிலுக்கு போக வேண்டும் என்று மாமிக்கு நினைவு வந்தது.
“டேய் கோண்டு, இந்தா இது அடுத்தாத்து சாவி. அந்த மாமி வெளிலே போயிருக்கா. கதவை வெளிலே பூட்டியிருக்கா. உஷா காலேஜ் லேர்ந்து வந்தா அவாத்தை திறந்து சாவியை மாமா கிட்ட தரச்சொல்லிடு. நேர உள்ள போக வேண்டாம்ன்னு சொல்லு. அந்த மாமா கையை புடிச்சி இழுத்துடுவார். கோகிலா கோயிச்சிக்க வேண்டாம்ன்னு சொன்னான்னு சொல்லணும். காபி போட்டு தரணும்.”
மாமி போய் விட்டாள்.
கொஞ்ச நேரம் கழித்து உஷா வந்தாள். கோண்டு சாவியை அவளிடம் கொடுத்து
“அக்கா, அம்மா இந்த சாவியை உன்னண்ட தரச்சொன்னா. கோகிலா மாமி வெளிலே போயிருக்காளாம். அதனாலே கதவைத் திறந்துண்டு உள்ளே போகணுமாம். அந்த மாமா கையை பிடிச்சி இழுப்பாராம்.கோயிச்சிக்க வேண்டாமாம். அவருக்கு காபி போட்டு தரணுமாம்.” என்றான்.
கம்யூனிகேஷன் செய்கிறவரும் கேட்கிறவரும் தெளிவாக இல்லாவிட்டால் என்ன நேரும் என்பதற்காக பயிற்ச்சி வகுப்புகளில் நான் சொல்கிற கதை இது.
மற்றபடி அடுத்த வீட்டு மாமா கையை பிடித்து இழுத்ததாகவும் அவரைத் தான் செவிட்டில் அறைந்ததாகவும் உஷா என்கிற பெயரில் யாராவது சொல்வதைக் கேட்டால் அந்த சம்பவத்தோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டாம்.

A – கிளாஸ் ஜோக்ஸ்....


ஐம்பத்து நாலு வயதான அந்த அக்கவுண்டன்ட் மனைவியின் டார்ச்சர் தாங்காது ஒரு நாள் காணாமல் போய் விட்டார். மனைவியை வெறுப்பேற்ற ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார்.
“நாளை காலை நானும் என் பதினெட்டு வயது செகரட்டரியும் கொடைக்கானலில் ஹோட்டலில் ஜாலியாக இருப்போம்”
அடுத்த நாள் காலை ஹோட்டல் மேனேஜர் ஒரு பேக்ஸ் ஐ நீட்டினார். அது அவர் மனைவியிடமிருந்து வந்திருந்தது.
“என்னையும் உங்கள் பதினெட்டு வயது குமாஸ்தாவையும் தனியாக விட்டுச் சென்றதற்கு நன்றி. உங்கள் அக்கவுண்டன்ட் புத்திக்கு உறைக்காத விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஐம்பத்திநாலில் பதினெட்டு மூன்று தரம் போகும். ஆனால் பதினெட்டில் ஐம்பத்திநாலு போகவே போகாது”

பெண் பேயிடம் ஒரு கேள்வி!


ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை  சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், “நான் உன்னை உயிருக்குயிராக  நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை.  நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று  எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால்,  தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன் “,  என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.
அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள்.  அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள்.  அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான். கதையைக்கேட்ட ஜென் துறவி, “இந்தப் பேய் மிகவும் புத்திசாலியானப் பேய்தான்” என்கிறார். ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற , செய்கிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான்.  அத்துறவியோ புன்னகைத்தபடி, “அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ  பெருமைப்பட வேண்டும்” என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்!
அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், “உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை,  அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும்  நீ விடை சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்கிறான்.
சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய  அள்ளி, ” என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்” என்கிறான். அவ்வளவுதான்,  அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!
என்ன, கதையைக் கேட்டாச்சா?  சரி, இப்போ நாம இந்தப்பதிவோட முக்கியமான செய்திக்கு வருவோம். அதாவது, கதை சொல்வதும் அதை புரிந்து கொள்வதும் ஒரு கலையாம். பெரும்பாலும் மக்கள், கதைகளில் வரும் வார்த்தைகளையும், கதையையும் மட்டுமே புரிந்துகொள்கிறார்களே தவிர, கதையின் அடிப்படைக் கருத்தை (மையக்கருவை) புரிந்துகொள்வதில்லையாம். அது எப்படி என்கிறீர்களா? உதாரணத்துக்கு இக்கதையையே எடுத்துக்கொள்வோம். இக்கதையைக் கேட்ட/படித்த சிலர் என்ன சொன்னார்கள் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்….
“யாருக்குமே எல்லாம் தெரிவதில்லை. பேய்களுக்கு கூடத்தான். சில வகையில் வேண்டுமானால் நாம் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் எல்லா வகையிலும் அல்ல”
“அந்த பேய் ஏன் திரும்ப திரும்ப வந்தது என்றால், எப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறது இந்தப் பேய் என்று அவன் எப்பொழுதும் ஆச்சரியப்பட்டான். அதனால், அந்தப் பேய் அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஒரு நாள்  எதிர்த்து நின்று தைரியமாக அவன் கேள்வி கேட்டவுடன் அந்தப் பேய் ஓடிவிட்டது”
“அவனில் ஒரு பகுதிதான் அந்தப் பேயே! அதனால், அவனுக்குத் தெரியாத எதுவும் அந்தப் பேய்க்கு தெரியவில்லை”
” அவனுடைய மனதிலிருந்துதான் அந்த பேய் வருகிறது. அதை உருவாக்கியவனும் அவனேதான். அவனுடைய குற்ற உணர்வுதான் பேயாக வந்து அவனை துன்புறுத்துகிறது”
” நாம் பயப்படுவதால்தான் எதுவுமே நம்மை பயமுறுத்துகிறது. அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது”
இன்னும் சிலர்…..
“எனக்கு இந்தக் கதையின் முடிவு பிடிக்கவில்லை. நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் நான் இந்த கதையை படிக்கத் தொடங்கினேன். கடைசியில் சப்பென்றாகிவிட்டது”
“ஆமாம் , அவன் ஒரு ஜென் துறவியைச் சந்தித்தான் என்று ஏன் அந்தப் பேயால் கண்டுபிடிக்க முடியவில்லை?”
ஒரே கதையை படித்தவர்களின் புரிதல்கள் எத்தனை விதத்தில் இருக்கிறதென்பதை கவனித்தீர்களா? ஆக, கதை ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தில் அது பல்வேறு விதமாக திரிந்து, கடைசியில் கதையின் அடிப்படைக் கருத்து காணாமல் போய்விடுகிறது. இதுபோலத்தான் நம் பயங்களும், வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளும்!
உண்மையில் பேய்கள் என்பது நம் பயங்களும், மனதில் ஏற்பட்டு நம்மை அலைக்கழிக்கும் ஒரு வித உளவியல் நோய்களுமே. அத்தகைய பயங்களை உருவாக்கி நம்மை இம்சிப்பதே நம் மூளைதான். அது பயங்களையும் உருவாக்கும், அதேசமயம் வேறு யாரோ ஒருவர் வந்து நம்மை பயமுறுத்துவது போல புலம்பவும் செய்யும்! ஆக, நம் பயங்களுக்கும் துன்பங்களுக்கும் நம் மூளைதான் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.
இதைத்தான் சொல்கிறது ஜென் வரலாறு. ஜென் துறவிகள் நம் கற்பனைப் பேய்களைவிட (மனித மனங்கள்!) அதிபுத்திசாலிகளாம். ஆனால், ஜென் துறவிகள் ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே இருக்கின்றனர்(பேய்கள் எங்கே இருக்கின்றன?). அவர்கள் சொல்வது என்னவென்றால், பேய்கள் என்பவை  நம் எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும்தான்.  பயப்படுவதற்கும், துன்பப்படுவதற்க்கும் நாம் விரும்பவில்லை என்றால் வேறு ஒருவர் வந்து  நம்மை எப்படி துன்புறுத்த முடியும்? சற்று சிந்தியுங்கள்!
அதனால், நாம் உருவாக்கிய பேய்களை (பயம், பற்று, எதிர்ப்பார்ப்பு, ஆசை, போதை….) நாமேதான் அழிக்க வேண்டும். மொத்தத்தில் பேய்கள்  நம்மைப் போன்ற உருவமில்லாதவை, வெறும் மனப் பிரம்மைகள்தான்! அவற்றை தூக்கி எறிந்துவிட்டு சென்றோமானால், நலமான வளமான வாழ்வை வாழலாம்!

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்.!

யு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!



தேஜா வு (Deja vu)


“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!
இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!

பேய்/பிசாசு/ஆவி


நம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும்.  எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ!  சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது  ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!

மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு!  ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே,  நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

top10_phenomena_intuitionநம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

மனிதன் போன்ற மிருகம்/Bigfoot

bigfoot3பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா  நெறைய பேர் சொல்லியிருக்காங்க!  அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?!  ஆனா அப்படி ஒன்னையும்  இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை!  வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!

டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!
எழுதின எனக்கே ஒரு மர்மதேசம் போய்ட்டு வந்த மாதிரி இருக்குதுன்னா…..அதாங்க, வின்னர் வடிவேலு மாதிரி, “அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த கதின்னா….அடிவாங்குனவன் கதி என்னவோ”?!, இப்படி பதிவப் படிச்ச உங்களுக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க!

இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)

நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து,  சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை!  இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!


உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?!  அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.
இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….
நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு  மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!