Thursday, 31 March 2011

பஞ்சாங்கம் பார்த்தா thirumanam?

முகூர்த்த நாள் என்றால் போக்குவரத்து நெரிசல் மட்டுமா? மாதத்தில் ஒருசில நாட்களே முகூர்த்த நாட்கள் என்பதால் பலருக்குத் திண்டாட்டம். சிலருக்கோ கொண்டாட்டம்.

முகூர்த்த நாள் என்றால் ஆட்டோ-வேன்களுக்கு கிராக்கி, காய்கறிக்கு கிராக்கி, பாலுக்கு கிராக்கி, மல்லிகை-முல்லை மலர்களுக்கு கிராக்கி, இசைக்கச்சேரி நடத்துவோருக்கு கிராக்கி, மேடை ஜோடனைக்காரருக்கு கிராக்கி, சமையல் காரருக்கு கிராக்கி, எல்லாவற்றிற்கும் மேலாக ஐயருக்கு கிராக்கி என எல்லாமே கிராக்கியாகி விடுகிறது.

புதுமனை புகு விழா போன்ற வேறு சில விழாக்கள் முகூர்த்த நாளில் வந்து விட்டால் கிராக்கியெல்லாம் படுகிராக்கியாகிவிடும்.

ஆறு மாதத்தில் வரன் பார்த்து முடித்தாலும் மண்டபத்திற்காக மேலும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இத்தனை நெருக்கடிகளுக்கும் என்ன காரணம்? முகூர்த்த நாள் பஞ்சம்தானே. இந்த ஆண்டு மொத்தமே 55 நாட்கள்தான் முகூர்த்த நாட்கள் என ஒரு பஞ்சாங்கம் வரையறுத்திருக்கிறது. ஆடியிலும், மார்கழியிலும் முகூர்த்தமே கிடையாது.

இந்த ஒரு பஞ்சாங்கம் மட்டுமே 'அத்தாரிட்டி' கிடையாது. வேறு சில பஞ்சாங்கங்களில் ஒரு சில நாட்கள் மாறுபடலாம். அனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதே அளவு எண்ணிக்கையில் தான் முகூர்த்த நாட்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

முகூர்த்த நாட்களில் எல்லா நேரத்திலும் திருமணம் செய்து விட முடியாது. காலை 4.30-6.00, 6.00-7.30, 7.30-9.00, 9.00-10.30 ஆகிய நேரங்களில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.

பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள முகூர்த்த நாள் மற்றும் நேரத்திலும்கூட ஒருவர் திருமணம் செய்து விட முடியாது. ஜாதகப் பொருத்தம் பார்த்த பிறகே தேதியும் நேரமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே திருமண நாட்கள் இன்னும் சொற்ப நாட்களாகிவிடுகின்றன.

ஒரு திருமணத்திற்கு சாராசரியாக இரண்டு நாள் என பதிவு செய்தாலும் ஒரு மண்டபம் ஓர் ஆண்டில் 110 நாட்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்படும். பல லட்சங்களைப் போட்டு மண்டபம் கட்டியவர் 365 நாட்களில எடுக்க வேண்டிய வருமானத்தை 110 நாட்களில் எடுக்க வேண்டும் என்றால் வாடகை எகிராதா என்ன?

முகூர்த்த நாளையும் நேரத்தையும் தவிர்த்து வேரொரு சாதாரண நாளிலும், நேரத்திலும் ஏன் திருமணம் செய்யக் கூடாது? அவ்வாறு செய்தால் என்னவாகும்?

கட்டுக்கடங்காமல் திரியும் காளைக்கு ஒரு கால் கட்டு போடுவதற்கா திருமணம்?

உழைத்துக் கொட்டவும், வருமானம் ஈட்டவும் கூடுதலாக ஒரு பெண்ணை கொண்டு வருவதற்குமா திருமணம்? மேலோட்டமாக பார்க்கும் போது இப்படிப்பட்ட காரணங்கள் உண்மை போலத் தோன்றும்.

ஆனால் இயற்கை விதிகளின் படி திருமணத்தால் ஏற்படும் விளைவு இனப் பெருக்கமும், விலங்கினங்களுக்கே உரிய பாலியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதுமேயாகும்.

இந்த விசயத்தில் பிற விலங்கினங்களுக்கும் மனித இனத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. மனித சமூகம் நாகரிகக் கட்டத்தை அடைந்துள்ளதால் சமூக ஒழுங்கு கருதியே ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாடும் ஊரறிய திருமணம் என்ற நிகழ்வும் நடத்தப்படுகிறது.

குடும்ப வாழ்வில், பாலியல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை-அதன் பலவீனங்களை திருமணத்தோடு தொடர்பு படுத்தி, இது போன்று நாள் நேரம் குறிக்கும் சதியை ஒரு கூட்டம் திட்டமிட்டே அரங்கேற்றியிருக்க வேண்டும். 


அந்தக் கூட்டம் எதுவாக இருக்கும்? உற்பத்தி மற்றும் உழைப்பில் ஈடுபடாமலேயே சொகுசாய் வாழ்க்கை நடத்தும் பார்ப்பன புரோகிதர் கூட்டம்தானே! 

இந்தக் கூட்டம், சட்டத்திற்கும் மேலாக உட்கார்ந்து கொண்டு கோலோச்சுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட அரசாங்கம் போட்டுள்ள பல சட்டங்களை மீறுவதற்கு மனிதன் தயங்குவதில்லை.

வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் வாங்காமல் இருக்கிறானா?

கையூட்டு வாங்குவது குற்றம் என்றாலும் வாங்காமல் இருப்பதில்லை. சட்டங்களை மீறினால் தண்டனை என்றாலும் மீறுவதற்குத் தயங்குவதில்லை.

ஆனால் முகூர்த்த நாளும் நேரமும் சட்டமாக்கப் படவில்லை. இவற்றை மீறினாலும் யாரும் தண்டனை வழங்கப் போவதில்லை. இருந்தும், முகூர்த்த நாளை மீறி வேறு நாளில் மணமுடிக்க முயல்கிறானா?

முகூர்த்த நேரத்தை மீறுகிறானா? அது கலைஞர் தலைமையிலான சீர்திருத்தத் திருமணமானாலும் தலைவர் வர நேரமாகிவிட்டால் முகூர்த்த நேரத்திற்குள் தாலியைக் கட்டிவிடுகிறான்.

பார்ப்பனர்கள் தங்களின் சுய நலத்திற்காக உருவாக்கிய முகூர்த்த நாள்-முகூர்த்த நேரம் எனும் புதை சேற்றில் சிக்கி மீள முடியாமல் தமிழினம் இன்று தவித்துக் கொண்டிருக்கிறது.

இயற்கையாய் நடக்க வேண்டிய நிகழ்விற்கு செயற்கையாய் ஒரு சில குறிப்பிட்ட நாட்களையும், நேரத்தையும் தீர்மானிப்பது இயற்கைக்கு எதிரானதல்லவா!

பஞ்சாங்கம் பார்த்தா விலங்கினங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன? பாலியல் உறவு கொள்கின்றன?

பிறகு மனிதனுக்கு மட்டும் ஏன் செயற்கையாய் நாள்-நேரம் குறிக்க வேண்டும்? முகூர்த்தமல்லாத நாளிலும், நேரத்திலும் திருமணம் செய்தால் மனிதர்களுக்கு என்ன கரடிக் குட்டிகளாபிறக்கும்?

பெண்களை நம்பாதே !

பெண்கள் தங்களது பாவங்களையும், பாகங்களையும் காட்டி உங்களை மயக்கப் பார்ப்பார்கள். அவள் இருண்ட கேஸத்தில் சிக்கிக் கொண்டு நீ மோசம் போய்விடாதே. அந்த சிரிப்பு என்ற நெருப்பில் மாட்டிக் கொண்டு மாய்ந்து போய்விடாதே.

முக்கியமாக பாவி, பெண்களின் மேல் பாகங்களைப் பார்த்து மயங்கி விழுந்து விடாதே. பின்னர் அதிலிருந்து நீ எழுந்திருக்கவே முடியாது. அதனால் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள். உலகில் யாவும் பொய். பொண்ணு பொய். அவளது மெய் (உடம்பு) யும் பொய்.- என எச்சரிக்கை விடுக்கிறார் அன்றே ஆதிசங்கரர்!

இன்று நாம் சகஜமாக செய்தித்தாளில் படிக்கிற பல செய்திகளையும் வைத்துப் பார்க்கிறபோது, சந்யாசிகள் முதல் கொண்டு சினிமாப்பட ரசிகர்கள் வரைக்கும் சங்கரரின் அறிவுரை மற்றும் எச்சரிக்கை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?

ஒரு பக்கம் தீவிர கட்டுப்பாடுகளுடன் சந்யாசத்தை தழுவிக் கொண்ட சங்கரர் வேத கர்மாக்களை எதிர்ப்பதிலும் அதி தீவிரம் காட்டிக் கொண்டிருந்தார்.

அதற்காக... தான் சந்யாசியான க்ஷணத்திலேயே தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.

இதைவிட முக்கியமாக பிராமணர்களுக்கு வேத கர்மாக்களை செய்வதற்கு பிரதானமாக இருக்கக்கூடிய யக்ஞோபிதம் அதாவது பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். வேதம் பொய். அதன் கர்மாக்கள் பொய் என்ற நிலையில் தன் தோள்பட்டையில் பூணூல் என்னும் பொய்யை எப்படி தாங்கிக் கொண்டிருப்பது என்ற சிந்தனையின் அடிப்படையில் தான் அதை கழற்றி எறிந்தார் சங்கரர்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் தான் சங்கரர் மீது வேதக்காரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சிகை (குடுமி) யக்ஞோபிதம் (பூணூல்) ஆகிய இரண்டும் கர்மாக்கள் செய்கையிலே பிராமணர்களுக்கு பிரதானம் என சாஸ்திரங்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில்...

சங்கரர் தடாலடியாக குடுமியை மழித்து, பூணூலை கழித்து சந்யாசியான விதம் அவர்களை அதிருப்தியாக்கியது.

சங்கரரின் இந்த செய்கைகள் ஏற்படுத்திய கோபத்தின் மீது இன்னொரு கோப அடுக்கை ஏற்படுத்தின - . அவரது உபதேசங்கள்.இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியிலே நான் குறிப்பிட்டுக் காட்டியதை போல... குழந்தாய்.. இந்தா பால், இதைக் குடித்து வளமோடு வாழு என்கிறது வேதம்.

உனக்கென உன்னை நம்பும் பெண்ணோடு இணைந்து வாழ்க்கையைச் சுகமாக நடத்துவாயாக. இதெல்லாம் கூடாது என சந்யாசம் பேசி வருபவர்களைச் சமூகத்துக்குள்ளேயே விடக்கூடாது. அவர்களை விரட்டியடியுங்கள் என சொல்கிறது வேதசாரம்.

இன்னும் உபநிஷது சொல்வது என்னவென்றால் ஜானாதீ இச்சதீ யததே...? அதாவது நாம் பார்ப்பதன் மேல் அறிவானது ஆசை கொள்ளும். ஆசையின் மிகுதியால் அந்த பொருளை அடைய பிரயத்தனம் செய்யும். பிரயத்தனம் செய்து அந்த ஆசைப்பட்ட பொருளை அடைந்தால் அதுதான் ஆனந்தம். இந்த ஆனந்தமே வாழ்க்கை. ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அடைய முயற்சிகள் செய்து முயற்சியில் வெற்றிபெற்று ஆனந்தப்படுவது தான் அறிவு -என்கிறது உபநிஷது.

ஆனால் சங்கரரின் அத்வைதம்... இவைகளுக்கு எதிரானவையாக இருந்ததால் வேதக்காரர்கள் சங்கரர் மீது சரமாரியாக கருத்துத் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்நிலையில் தான் சங்கரரை பின்பற்றியவர்களிலேயே இரண்டாக சிறு பிளவு ஏற்பட்டது.

உலகமே மாயம் என்று மாயாவாதத்தை ஒரு பிரிவினரும், மாயம் அல்ல, அது நம் அக்ஞானம் என்று ஒரு பிரிவினரும் முளைத்தனர்.சங்கரர் முழுக்க முழுக்க தன் தத்துவத்தை “Educated Class” அளவிலேயே கூறி வந்ததால், இந்த பிளவும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

Wednesday, 23 March 2011

நாம் ஹிந்துக்களா?

ஹிந்துமதம் என்பதும், ஹிந்துமத சம்பந்தமான சாஸ்திரங்கள், கடவுள்கள், கடவுள் கதைகள், நடத்தைகள் முதலியவைகள் எல்லாம் தமிழனுக்கோ, தமிழ்நாட்டிற்கோ சம்பந்தப்பட்டதல்ல; சிறிதளவும் சம்பந்தப்பட்டதல்ல. அவை யாவும் எந்தத் தமிழனாலும் ஏற்பட்டவையுமல்ல; அவற்றுள் எவையும் எதுவும் தமிழ்மொழியில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டவையுமல்ல.

இவையாவும் அந்நிய மொழியாகிய வட மொழியிலும், தமிழன் - தமிழ் நாட்டினன் அல்லாதவனான அந்நியன் மொழியாகிய ஆரிய மொழியிலும் வட நாட்டானான ஆரியனாலுமே ஏற்படுத்தப்பட்டவை, செய்யப்பட்டவையுமே ஆகும்.

ஆரியன் இங்கே வந்து “அய்யர்” ஆனான்

அது போலவேதான் ஜாதி என்பதும், ஜாதி முறை என்பதும், ஜாதி அமைப்பு என்பதும், தமிழ்நாட்டிற்கோ தமிழர் சமுதாயத்திற்கோ ஏற்றதுமல்ல; தமிழ் பழக்க வழக்கங்களுக்கு, தமிழர் வாழ்விற்கு ஏற்றவையுமல்ல; ஏனென்றால், இவை யாவும் யாவற்றுக்கும் ஏற்பட்ட நடப்பு எதுவும் தமிழ்மொழியில்லை என்பதோடு, தமிழர் சமுதாயத்தில் இருந்தவையுமல்ல; தமிழரால் உண்டாக்கப்பட்டவையுமல்ல.

ஜாதியானது, எப்படி வெள்ளைக்காரன் நம் நாட்டுக்கு வந்து “துரை”ஆனானோ - முஸ்லீம் எம்படி நம் நாட்டுக்கு வந்து, “சாயபு”ஆனானோ - அதுபோல் ஆரியன் நம் நாட்டுக்கு வந்து “அய்யர்” ஆனான்; “பிராமணன்” ஆனான்; “பிராமணாள்” ஆனான்.

பார்ப்பானைப்போல வேதத்தைத் தொட்டாலும் தீட்டு

பார்ப்பானுக்குக் குறிப்புப் பெயர் வேதியன் என்பதாகும். வேதியன் என்றால் வேதத்திற்கு உடையவன் என்பதுதான் பொரும். அந்த வேதம் எந்த விதத்திலும் தமிழர்களுக்குச் சம்பந்தப்பட்டதல்ல; தமிழர்களுக்கு உரியதுமல்ல; தமிழுமல்ல; தமிழரால் ஆக்கப்பட்டதுமல்ல. எப்படி ஆரியன் (பார்ப்பான்) கடவுள், தமிழன் தொட்டால் தீட்டு ஆகிவிடும் - கெட்டுப்போகும் என்று சொல்லப்படுகிறதோ, அதுபோலவே வேதமும் தமிழன் தொட்டாலும், அதைப் படித்தாலும், காதில் கேட்டாலும் கெட்டுவிடும். பார்ப்பான அல்லாதவன் பார்த்து கேட்டுவிட்டால், அவன் குருடனாக ஆக வேண்டும் - செவிடனாக ஆகவேண்டும் என்பது பார்ப்பனர் நிபந்தனை ஆகும்.

இதையேதான் சற்றேறக்குறைய பார்ப்பன ஆதாரங்களாகிய சாஸ்திர - தர்ம சாஸ்திர - புராணங்களுக்குமே பார்ப்பனர் நிபந்தனை விதித்து இருக்கிறார்கள். இவைகள்தான் இந்துமத தர்மம் ஆகவும் - இந்து மதக் கொள்கை ஆகவும் இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் இருந்துவருவதுமாகும்; இவைதான் இந்துமதத் தர்மமும் ஆகும்.

நமது மதமாயிருந்தால் நாம் ஏன் ஈனஜாதி இவற்றிற்குக் கட்டுப்பட்டவன்தான் - இந்த நிபந்தனையை ஏற்றவன்தான் ஹிந்து ஆவான். தமிழ் நாட்டாரே! தமிழ் சமுதாயத்தாரே! தமிழர்களே இப்பொழுது சிந்தியுங்கள்.

நாம் ஹிந்துக்களா? ஹிந்து மதத்தவர்களா? ஹிந்து மதத்திற்கு உரிய கடவுள், மத வேத சாஸ்திர புராண இதிகாச தர்மங்கள், ஜாதிமுறைகள், அமைப்புகள் - இவை சம்பந்தமான கோயில் குளம், அவற்றின் கதைகள் - நடப்புகள் நமக்குச் சம்பந்தப்பட்டவைகளா என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஹிந்துமதம் நமது மதமாயிருந்தால், அதில் நாம் நம்மை ஈன ஜாதி - இழிபிறவி - நாலாம் ஜாதி - சூத்திரன் பார்ப்பானின் அடிமை - பார்ப்பானின் தாசி மக்கள் - நமது பெண்கள் பார்ப்பானுக்குத் தாசிகளாக இருக்கத் தக்கவர்கள் என்று எழுதிவைத்துக் கொண்டிருக்க முடியுமா?

“ஹிந்து”என்ற சொல் “சிந்து”விலிருந்து வந்தது

நிற்க. ஹிந்து என்றோ - இந்துமதம் என்றோ - இந்தியா என்றோ ஆரியர்களின் எந்த ஆதாரத்திலும் ஒரு இடத்திலாவது - ஒரு சொல்லாவது இல்லவே இல்லை. மத ஆதாரங்களில் காணம் படுவதெல்லாம் பாரத தேசம், பாரதம் என்றும், சமுதாயத்திற்கும் ஆரியர் என்றும், தேவர்கள் என்றும், ஆரியர்களுடைய எதிரிகளைக் குறிக்க அசுரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், இராக்கதர்கள் என்றும்தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே ஒழிய - இந்தியா, ஹிந்து என்ற சொற்கள் எந்த சாஸ்திர - புராண இதிகாசங்களிலும் மத சம்பந்தமான எந்த ஆதாரங்களிலும் காணமுடிவதில்லை.

தவிரவும் இந்தியா என்ற சொல் - ஹிந்து என்ற சொல் “சிந்து”என்னும் ஒரு நதியின் காரணமாக அதன் கரையில் வாழ்ந்தவர்களுக்கு ஏற்பட்ட பெயர் என்றும், வடமொழியில் “சி” என்பதும் “ஹி”என்பதும் ஒரே சப்தமாக மாற இடம் உண்டு என்கிற காரணத்தால் சிந்து ஹிந்து என்றாயிற்று என்றும் சொல்லுகிறார்கள். ஆங்கில அகராதிகள் சொல்வது என்ன?

பிறகு, ஹிந்துக்களைக் கொண்ட நாடு இந்தியா என்று ஆயிற்று என்றும், இந்தப் பெயரும் அந்நியரால் கொடுக்கப்பட்டதென்றும், இந்தியாவில் வசித்ததால் ஹிந்து என்று அழைக்க நேர்ந்தது என்றும், இதுவும் இஸ்லாமானவர்களாலும் வெள்ளையர்களாலும் கொடுக்கப்பட்ட பெயரே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

அதுவும் எந்தவிதத்திலும் தமிழர்களுக்குப் பொருந்தாது என்பதோடு, ஆரியர்களுக்குத்தான் பொருந்தும் என்பதே ஆராய்ச்சியாளர்கள் முடிவு.

ஹிந்து என்ற சொல்லுக்கு “ ஆரியர்கள்” என்ற பொருள்.மேனாட்டு அகராதிகளில் காணப்படுகின்றது. தவிரவும், ஹிந்துக்கள் என்ற சொல்லுக்கு கிறிஸ்தவர், முகமதியர் அல்லாத மக்கள் என்று ஆங்கில அகராதிகள் (டிக்சனரிகள்) கூறுகின்றன.

The concise oxboard dictionary of current English(1968 ஆம் ஆண்டு பதிப்பு) பக்கம் 516 இல் Hindu என்பதற்கு “Aryan of N. india who(also any one who) professes hindusim என்று போட்டிருப்பதுடன் இதற்குச் சமஸ்கிருத “ரூட்” என்று குறிப்பிட்டு “SINDU RIVER” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து என்றால் அறிவற்றவன் - முட்டாள்

ஹிந்து என்ற சொல்லையும், இந்துக்கள் என்ற குழுவினரையும் மேனாட்டவர்களும் முஸ்லீம்களும் மிகமிக இழிவாகவே கருதுகிறார்கள். அதாவது, அஞ்ஞானிகள் என்றும் அறிவற்ற முட்டாள்கள் என்றும் கருதுகிறார்கள்.

மத கடவுள்கள், அக்கடவுள்களின் நடப்புகள். அவற்றின் கதைகளான புராண இதிகாசக் கூற்றுக்கள் நமக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டவை அல்ல என்பதைச் சிந்தித்துத் தெளியுங்கள்.

போபால் குற்றவாளி ஆண்டர்சனை இந்தியா கொண்டுவர சிபிஐ.,க்கு நீதிமன்றம் அனுமதி

போபால் விஷவாயு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான வாரண் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர சிபிஐ.,க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


1984-ல் ஏற்பட்ட போபால் விஷவாயு சம்பவத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக ஊனமடைந்தனர். இந்த சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

அவரை இந்தியாவுக்கு கொண்டு வர சிபிஐ முயன்று வருகிறது. இந்நிலையில், அதுதொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மூலம் முன்வைக்க சிபிஐ.,க்கு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

தில்லி முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இதுதொடர்பான மனு நீதிபதி வினோத் யாதவ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "போபால் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை கணக்கில் கொண்டும், நீதியின் நலன் அடிப்படையிலும், ஆண்டர்சனை நாடு கடத்துவது சரியானது என்று கருதுகிறோம். எனவே, அவரை இந்தியாவுக்கு கொண்டு வர எந்த தடையும் இல்லை. இதில், சிபிஐ.,யின் கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது."" என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Tuesday, 22 March 2011

தமிழ்



இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்தபண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம்இலத்தீன் மொழிகள் போல் இந்திய வரலாற்றை அறிய தமிழ்சமஸ்கிருதம்மொழிகள் தேவையாக உள்ளது. தமிழின் செம்மொழித் தகுதிக்கு திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களானஎட்டுத்தொகைபத்துப்பாட்டுபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் , மணிமேகலை , முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்றவை உள்ளன.

சென்னை


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.
1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடெல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில த.தொ பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ் (TVS), அசோக் லெய்லாண்ட்ஹையுண்டாய் (Hyundai), போர்டு (Ford), மிட்சுபிஷி (Mitsubishi), டி.ஐஎம்.ஆர்.எஃப்பி.எம்.டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடியில் இந்திய ராணுவம்தொடர்பான பல நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு தயாரிக்கப்படுகிறது.

கோலம் ஓர் அறிமுகம்


கலை நயம் உடைய அனைவரையும் கவரும் ஒரு கலையாக கோலம் அமைகிறது. கோலம் இடுதல் ஒரு கலை.
இதில் ஒரு ஆரோக்கிய இரகசியமும் ஒளிந்துள்ளது. கோலம் இடுவதற்காக காலையில் எழுவது உடலுக்கும், மனதிற்கும் நல்லது.
விடியற்காலையில் எழுந்து கோலம் இடும் பழக்கம் ஓசோனிலிருந்து வரும் சுத்தமான காற்று கிடைக்கசெய்கிறது. இடுப்பிற்கும், விரல்களுக்கும் ஒரு பயிற்சியாகிறது.
கோலம் இடுவது ஒரு வகையில் கணக்கு எனலாம். இதனால் நியாபக சக்தி அதிகரிக்க வாய்ப்பாகிறது.
மேலும், கோலம் இடுபவருக்கும் மற்றவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றால் மிகையில்லை.

கம்யூனிசம்: ஒரு பகிரங்க விவாதம்

முதலாளித்துவத்தின் சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்க வல்ல ஒரே பாதை கம்யூனிசப் பாதை மட்டுமே. சோசலிசம் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) என்பது கம்யூனிசத்தை நோக்கிய முதல் சமூக கட்டுமானம்.சோசலிச சமூகத்தில் அனைவரும் உழைக்க வேண்டும், சமூக வளர்சிக்கு ஒவ்வொருவரும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது. முதலாளிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் அவர்களும் உழைத்தே ஆக வேண்டும், உழைக்காமல் வாழ முடியாது. சோசலிச சமுதாயத்தில் சுரண்டல் ஒழிக்கப்படுகிறது. சோசலிச உற்பத்தி மக்களின் தேவைக்கேற்ப இருக்கும், முதலாளித்துவ உற்பத்தி லாபத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கிறது. உண்மையான மக்களாட்சி சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியம். வலைப்பூவில் சிலர் கம்யூனிசம் தேல்வி அடைந்து விட்டதாக எழுதியதை வாசிக்க நேர்ந்தது, ஆதலால் இந்த பதிவை எழுத வேண்டிய சூழலில் உள்ளேன்.சீனாவிலும், ரஷ்யாவிலும் கம்யூனிசம் தோல்வியடைந்து விட்டதா? இது ஒரு பின்னடைவு மட்டுமே. லெனின் இதுபற்றி கூறுகையில் ரஷ்யாவை சுற்றி அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவம் உள்ளது, ஆகையால் சோசலிசம் எப்போதும் அழிக்கப்படலாம் என்கிறார். அதற்கேற்றவாறு அமெரிககா போன்ற 14 முதலாளித்துவ நாடுகள் அதன் மீது போர் தொடுத்தன அதை ரஷ்யா எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இராணுவ ரீதியில் வெல்ல முடியாத இந்த நாடுகள் ரஷ்யா முழுவதும் உளவாளிகளை உடுருவ செய்தன, உளவாளிகள் கட்சியின் மத்திய கமிட்டி வரையிலும் உடுருவி இருந்தனர். ரஷ்ய மக்களின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் முயற்சியிலும் அந்த நாடுகள் ஈடுபட்டன. ஸ்டாலினுக்கு பிறகு வந்த குருஷேவ், கோர்பஷேவ் , எல்சின் முதலானவர்கள் மார்க்சின் தத்துவத்திற்கு நேரெதிராக முதலாளித்துவம் ஒழிந்துவிட்டதாக காரணம் கூறி வர்க்க போராட்டத்தை கைவிட்டனர், அவர்களின் தவறால் சோசலிசம் அங்கு பின்னடைவை சந்தித்தது. முதலாளித்துவ நாடுகளின் சோசலிசம் தகர்ந்துவிட்டதென்ற பொய் பிரச்சாரமும் ஒரு காரணம்.சோசலிச நாடுகளே இல்லையென்பதால் கம்யூனிசம் தோல்வியுற்றுவிடுமா? எப்போது சுரண்டலும், முதலாளித்துவம் ஒழிக்கப்படுகிறதோ அது வரை கம்யூனிசத்தின் தேவை இன்றியமையாததாகிறது. முதலாளித்துவத்தின் விதியான உழைப்புச் சுரண்டலும், ஏகாதிபத்தியமும் ஒழிக்கப்படும் வரை இந்த வர்க்கப் போராட்டம் ஓயாது. மார்க்ஸ் குறிப்பிட்டது போல முதலாளித்துவத்தில் ஏகாதிபத்தியங்கள் தனக்கு கீழே உள்ள காலனி நாடுகளையும், பெருமுதலாளிகள் சிறுமுதலாளிகளையும், சிறுமுதலாளிகள் உழைக்கும் மக்களையும் சுரண்டுகின்றனர், சுரண்டல் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை. சுரண்டப்படும் வர்க்கம் இதனை எதிர்த்து போராடுவது இயல்பே.தற்போதுள்ள சூழலில் நேரடியாக காலனியாதிக்கம் செய்ய முடியாத நிலையில் முதலாளித்துவ நாடுகள் காலனிய ஓப்பந்தங்கள், கலாச்சார சீரழிவுகளின் மூலம் தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகளை இப்படிதான் மறுகாலனியாதிக்கத்தை நடைமுறை படுத்துகின்றன.முன் எப்போதும் இல்லாத அளவில் முதலாளித்துவ வர்கத்திற்கும் பாட்டாளி வர்கத்திற்குமான இடைவெளி அதிகரித்து உள்ளது, இது மக்களை சோசலிசத்தை நோக்கி செல்ல வழிவகுக்கிறது. மக்கள் சோசலிசம் நோக்கி திரண்டு போராடுவதை தடுக்கவே WSF, NGOs, ASF போன்ற அமைப்புகள் அமெரிக்காவால் உலகம் முழுவதும் நிறுவப்படுகிறது. இந்த அமைப்புகள் உழைப்பவர்களை ஒன்று படவிடாமல் பிரிக்கின்றன(தலித்துகள், பெண்கள் என்று தனித்தனியாக பிரிக்கின்றன). முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் உழைக்கும் மக்களை சுரண்டலில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாது.


குறிப்பு : சுரண்டல் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை, முதலாளித்துவத்தை தூக்கியெறியாமல் சுரண்டலையும் வறுமையையும் ஒழிக்க முடியாது. இதை கம்யூனிசத்தால் மட்டுமே சாதிக்க முடியும். இதில் வேறு கருத்து உடையவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்க தயாராகவே இருக்கிறேன். உங்கள் மாற்று வழியுடன் விவாதிக்க தயாரா?

தாலிக்கு அர்த்தம்

திருமணம் முடிந்த பெண்களை நம்மாள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் அவர்கள் அணிந்திருக்கும் மங்களகரமான மஞ்சல் கயிறு (அது தான் தாலி) அதை உறுதிப்படுத்திவிடும், அது என்ன பெண்களுக்கு மட்டும் அடையாளமாக தாலி அப்ப ஆண்களுக்கு இல்லையா? முன்பெல்லாம் ஆண்கள் அவர்களின் கால் விரல்களில் பெண்கள் அணியும் மிஞ்சி (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) போல அணிவார்களாம் ஆனால் அது எப்படி நாளடைவில் இல்லாமல் போனது பற்றி போதிய தகவல்கள் இல்லை அதனால் அதை விட்டுவிடுவோம் சரி பெண்கள் மட்டும் கழுத்தில் திருமணம் முடிந்ததன் அடையாளமாக கழுத்தில் தாலி அணிகிறார்கள் ஆண்களும் காலில் மிஞ்சி அணிவதற்கு பதிலாக வேறு ஏதாவது கழுத்தில் அடையாளமாக அணிந்திருக்கலாமே என கேள்வி கேப்பவர்களுக்காக பெண்கள் பொதுவாகவே (பழங்காலத்து பெண்கள்) தரையை பார்த்துதான் நடக்கிறார்கள் (இப்பொழுதுதான் இருவரும் சரிசம்மாகிவிட்டோமே) அதனால் அவர்கள் திருமணமான ஆண்களை அடையாளம் கண்டுகொள்ளத்தான் ஆண்களுக்கு காலில் மிஞ்சி அணிந்தார்கள் ஆண்கள் எப்படி நடப்பார்கள் என்பதுதான் எல்லாருக்குமே தெரியுமே அதனால்தான் பெண்களுக்கு கழுத்தில் தாலி

மன்னிக்கவும் நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு எங்கோ செல்கிறேன் இப்பவும் ஆண்கள் திருமணத்தின் போது பெண்களின் கழுத்தில் தாலி கட்டுகிறோம் அந்த தாலிக்கு சில அர்த்தங்கள் இருக்கின்றன நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும் அப்படி தெரிந்தவர்களுக்கு மீண்டும் ஞாபகபடுத்திகொள்ளவும் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும் தான் இந்த பதிவு

தாலியை நன்கு கவணித்து பாருங்கள் அதை சுற்றி மொத்தம் ஒன்பது இலைகள் உள்ளது போல தோற்றமளிக்கும் கவனிக்காதவர்கள் பார்த்துக்கொள்ளவும் அந்த ஒன்பது இலைகளும் வெரும் வடிவமைப்புக்காக செய்யப்பட்டதல்ல அவை ஒவ்வொன்றிற்கும் காயத்திரி மந்திரத்தில் ஒவ்வொரு அர்த்தம் உண்மையும் பொதிந்துள்ளது

தாலியின் இலைகள்:
1)வாழ்க்கையை உண்மையாக புரிந்துகொள்ளவேண்டும்
2)மேண்மை பெற வேண்டும்
3)ஆற்றல் மிக்கவராய் இருத்தல் வேண்டும்
4)தூய்மை அவசியம் வேண்டும்
5)தெய்வீகம் தேவை
6)உத்தம குணம் தேவை
7)விவேகம் முக்கியம்
8)தன்னடக்கம் கட்டாயம் தேவை
9)தொண்டு மனப்பாண்மை வேண்டும்

மேற்சொன்ன இத்தனை அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் தாலி அதுவே பெண்களை காக்கும் வேலி

விபூதி பூசிக்கொள்வதன் அர்த்தம்

கிராம‌ங்க‌ளில் பெண்க‌ள் அதிகாலை வாச‌ற் தெளிக்கும் போது ப‌சுவின் சாண‌த்தை த‌ண்ணீரில் க‌ரைத்து தெளிப்ப‌தைப் பார்த்திருப்பீர்க‌ள்!. இது ஒரு கிருமினாசினி என்ப‌தை உண‌ர்ந்து நாம் அதை ஒரு வாழ்க்கை வ‌ழ‌க்க‌மாக‌வே வைத்திருக்கிறோம். இதை எரித்து சாம்ப‌லாக்கும் போது உட‌லைச் சுத்த‌ப்ப‌டுத்துவ‌து போல‌ உள்ள‌த்தையும் சுத்த‌ப்ப‌டுத்துகிற‌து. மேலும் நெற்றியில் பூசிக்கொள்ளும் போது அதிக‌மாக‌ த‌லை நீர் த‌ங்குவ‌தையும் த‌டுக்கிற‌து. 

கவிஞார் கண்ணதாசன்


வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?
ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது.
சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.
அன் துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.
ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான்.
ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது.
ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது.
சுயதரிசன் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது
ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது.
என் ஆசை எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.
சிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன்.
கொஞ்ச நாளில் கிடைத்தது.
மாதம் இருப்பத்தைய்து ரூபாய் சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.
ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.
“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.
அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரகையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று.
அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று.
அது ஆயிரமாக வளர்ந்தது.
ஈராயிரமாகப் பெருகிற்று.
யாவும் கிடைத்தன.
இப்பொழுது நோட்டடிக்கும் உருமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!
எந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.
‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?
அதுதான் இறைவன் லீலை!
ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.
குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய்விட்டால் மனிதனுக்க அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.
அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக்கண்டுபிடிக்க முடியாது.
ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கா, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.
ஆசையை மூன்றுவிதமாப் பிரிக்கிறது இந்து மதம்.
மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!
மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.
பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.
பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.
ஆகவேதான்,பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.
பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!
“இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.
ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.
நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.
அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே.
மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது.
சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான்.
ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.
அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.
“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” - என்பது திருக்குறள்.
ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.
அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?
அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல்ய என்று போதித்தது இந்து மதம்.
நேரிய வழியில் ஆசைகள் வளரலாம்.
ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு.
ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது.
எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் த்த்துவம்.
எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?
லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன்மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே,ஏன்?
அது ஆசை போட்ட சாலை.
அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையிலிருக்கிறது.
போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது.
அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம்.
‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்.
வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.
இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.
அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.
வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.
அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல.
உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது.
உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது.
‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது.
தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.
யாராவது ஆடவன்தன்னை உறு நோகுகிறான் என்பதைக் கண்டால், இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையை இழுத்து மீட்க்கொள்கிறார்களே, ஏன்?
ஏற்கனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும் திருத்துகிறார்களே, ஏன்ழ
எந்தவொரு ‘கவர்ச்சி’யும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டிஇடக்கூடாது என்பதால்.
ஆம்; ஆடவன் மனது சலனங்களுக்கும், சபலங்களுக்கும் ஆட்பட்டது.
கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது.
அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது.
“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி.
கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.
அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது.
அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.
இன்றைய இளைஞனுக்கு ஷேக்பியரைத் தெரியும்; ஷெல்லியைத்தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப்போன பின்புதான் அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.
ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண மரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இநுத் மதம் என்பது வெறும் ‘சாமியார் மடம் ‘ என்ற எண்ணம் விலகிவிடும்.
நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள, உன் தாய் விடிவில் துணை வருவது இந்துமதம்.
ஆசைகளைப்பற்இ பரமஹம்சர் என்ன கூறுகிறார்?
“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களிஙல் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்” என்கிறார்.
“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.
அது போல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது”
“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி விடுகிறது”. என்றார்.
அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம்.
நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது.
உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.

கட்டபொம்மனை புறக்கணித்த அரசியல்வாதிகள்

தூத்துக்குடி: சுதந்திரபோராட்ட வீரர் கட்டபொம்மனின் பிறந்த நாளான நேற்று, எந்த அரசியல்வாதியும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலுள்ள அவரது சிலைக்கு மாலையணிவிக்க வரவில்லை. ஆங்கிலேயேர்களை தீரமுடன் எதிர்த்த, சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 252வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில், அவரது நினைவுக்கோட்டையிலுள்ள, அவரது சிலைக்கு, கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி தலைவி லதா கருணாநிதி, கோட்டை பொறுப்பு அதிகாரி சீனிவாசன் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். ஆனால், அமைச்சரோ அல்லது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு அரசியல்வாதியோ அல்லது மாவட்ட அரசு அதிகாரிகளோ மாலையணிவிக்க வரவில்லை. இதனால், கட்டபொம்மன் வாரிசுகள், மிகவும் வேதனைப்பட்டனர். அவர்கள் கூறும்போது, ""கட்டபொம்மன் இந்திய மக்களின் விடுதலைக்காக போராடினார். சிறப்புக்குரிய அந்த வீரரது நினைவு தினமாயினும் சரி, பிறந்த தினமாயினும் சரி, எந்த அமைச்சரும், அரசியல்வாதியும் கோட்டைக்கு வருவது கிடையாது. இதுதான், கட்டபொம்மனுக்கு அவர்கள் தரும் மரியாதையா?'' என அவர்கள் கேள்வியெழுப்பினர்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.​

அணுஉலைகள் விபத்து இழப்பீடு தொடர்பான மசோதாவுக்கு பரவலாக எழுந்த கடும் எதிர்ப்புகள் மிகமிக நியாயமானவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது போபால் நீதிமன்றம் யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுவாயுக் கசிவினால் பல ஆயிரம் பேர் இறந்த வழக்கில் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு.

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட,​​ அன்றைய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் செயல் தலைவர் கேசவ் மகிந்திரா உள்ளிட்ட 8 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ள நீதிமன்றம்,​​ அவர்கள் பிணையில் செல்லவும் மேல்முறையீடு செய்யவும் அனுமதித்துள்ளது,​​ அதே நாளில் சிலமணி நேரங்களில் அவர்கள் ​ வீடு திரும்பினர்!
ஆவணங்களின் படி 3000-க்கும் அதிகமானோரும்,​​ ஆவணத்துக்குள் இடம்பெறாமலும் தொடர் விளைவாகவும் 25,000 பேரும் இறந்த இந்தச் சம்பவத்தில் நீதிகேட்டு சலித்துப் போய் காத்திருக்கும் மக்களுக்கு,​​ இந்தத் தீர்ப்பு மேலும் வலியைக் கூட்டுவதாக இருக்கிறது என்பதே உண்மை.​ ​
இந்தத் தீர்ப்பில் யாருக்கும் திருப்தி இல்லை.​ இந்தத் தீர்ப்பு பற்றி கருத்துத் தெரிவித்துள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி,​​ "தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி ​ என்று சொல்வதுதான் வழக்கம்.​ இது புதைக்கப்பட்ட நீதி' என்று கூறியிருக்கிறார்.​ இந்தத் தீர்ப்பு சரியானதல்ல என்று இத்தனை காலமாக நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிவரும் தன்னார்வ அமைப்புகளும் கூறியுள்ளன.​ மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறியுள்ளன.​ ​
இதற்காக போபால் நீதிமன்ற நீதிபதி மோகன் பி.​ திவாரியை குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை.​ ஏனென்றால்,​​ அவர்​ முன் வைக்கப்படும் ஆதாரங்கள் அத்தகைய பலமில்லாத,​​ உறுதியில்லாத,​​ ஆதாரங்கள் இல்லாத அல்லது துடைத்தழிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே.​ மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்த,​​ குற்றப்பத்திரிகையில் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதி யாராக இருந்தாலும் தீர்ப்பு இப்படியாகத்தான் இருந்திருக்கும்.​ ​
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பி.ஆர். லால் இந்தத் தீர்ப்பு பற்றி கருத்துத் ​ தெரிவிக்கையில்,​​ தங்களை முழுமையாகச் செயல்பட அப்போதைய அரசு அனுமதிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.​ ஓய்வுபெற்ற அதிகாரி என்பதால்தான் இதைக் கூட இப்போது வாய் திறந்து சொல்கிறார்.​ அவரது துறையில் அவர் நியாயமானவராக இருந்திருந்தால்,​​ அரசின் நிர்பந்தங்களுக்குப் பணிந்துபோக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்குமா?
இந்த வழக்கில் மனப்புண்ணைக் கிளறிப் பார்க்கிற விஷயம் இந்தத் தீர்ப்பு அல்ல.​ இந்தத் தீர்ப்புக்குள் "அடங்க மறுக்கும்' அல்லது இந்திய அரசு "அடைக்க மறுக்கும்' அன்றைய கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை என்பதும்,​​ பிணையில் வெளிவந்து இந்தியாவை விட்டுச் சென்ற ஆண்டர்சன் நியூயார்க்கில் வாழ்கிறார் என்று எல்லோரும் சொன்னபோதிலும் அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பதும்தான்.
இந்தத் தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் யூனியன் கார்பைடு நிறுவனம் மிகத் தைரியமாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.​ எங்களைக் குற்றவாளியாக விசாரிக்க இந்திய அரசுக்கு அதிகார வரம்பு இல்லை.​ விபத்து நடந்த பின்னர்,​​ என்றைக்கு நாங்கள் இழப்பீட்டை சமரசத் திட்டத்துக்குப் பிறகு அளித்துவிட்டோமோ,​​ அப்போது எங்கள் பங்கு முடிந்துவிட்டது.​ அந்த நிறுவனத்தைச் சரியாக நிர்வகிக்காத அதிகாரிகள் மீதுதான் இப்போதைய வழக்கு என்று கூறியுள்ளது.​ ​
இந்த ஆலையில்,​​ டிசம்பர் 3,​ 1984-ம் ஆண்டு விபத்துக்கு முன்பாகவே நடந்த சிறுவிபத்துகள் குறித்து அமெரிக்க நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு நடத்தி,​​ குறைகளைச் சுட்டிக்காட்டிய பிறகும் அதைச் சரிசெய்யவில்லை என்பதுதான் சிபிஐ தரப்பிலான ​ வழக்குரைஞரின் வாதம்.​ ​
ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் பணம் செலவழிக்க மறுத்து,​​ குறைகளைக் களைய தாமதம் செய்தால் அது யாருடைய குற்றம்?​ லாபம் மட்டுமே பார்க்க விரும்பும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் குற்றமா அல்லது அங்கு சம்பளத்துக்குப் பணியாற்றும் ஊழியர்களின் குற்றமா?
​ சாதாரணமாக ஒரு கட்டடம் இடிந்து விழுந்து சிலர் இறந்துபோனாலும்கூட,​​ கட்டடம் கட்டும் கான்ட்ராக்டரை கைது செய்வார்களா அல்லது மேஸ்திரி,​​ சித்தாள்களைக் ​ கைது செய்வார்களா?​ என்பது நமக்குத் தெரிந்த நியாயங்கள்;​ சட்டம்தான் இருட்டறையாயிற்றே.​ அங்கே இந்த நியாயங்கள் எப்படி எடுபடும்?​ அப்படியே எடுபட்டாலும்,​​ எடுபடாமல் போவதற்கு உப்புச் சப்பில்லாத,​​ நீதியைத் திசைதிருப்பும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதே...
செத்துப் போனவர்களைவிட இப்போது வாழ்பவர்கள் அங்கே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று 1999-ம் ஆண்டு போபாலில் ஆய்வு நடத்திய கிரீன்பீஸ் அமைப்பு கூறியது.​ இன்னமும் அந்த மண்ணில் சயனைடு நஞ்சு கலந்து கிடப்பதாகவும்,​​ நீர்நிலைகளில் அந்த நச்சு எச்சம் இருப்பதாகவும் கூறியது.​ இருந்தும்கூட,​​ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.​ இந்தியாவை விட்டுத் தப்பிப்போன வாரன் ஆண்டர்சன்னை பிடித்துவந்து தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை.​ ​ இந்நிலையில் என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்?​ ஆண்டர்சன் விவகாரத்தில் எப்படி நடந்துகொள்கிறதோ அதைப்போலவேதான் ஹெட்லி விஷயத்திலும்,​​ கசாப் விஷயத்திலும்கூட இந்திய அரசு நடந்துகொள்ளப் போகிறது.​ ​
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.​ ஆனால் இப்போதெல்லாம் அதற்கு ரொம்ப நாளாகிறது.​ போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு -​ வெந்த புண்ணில் வேல்

TNPSC பொது அறிவு


1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
அ) எம்.எஸ்.சி., சித்ரா    ஆ) எஸ்.எம்., கங்கா
இ) ஆர்.எம்., யமுனா    ஈ) எம்.எம்., அர்ஜூன்
2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
அ) உமர் அப்துல்லா    ஆ) லாலு பிரசாத்
இ) சுரேஷ் கல்மாடி    ஈ) கவாஸ்கர்
3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) போட்டோ போபியா    ஆ) சீட்டோ போபியா
இ) மால்டோ போபியா    ஈ) அகஸ்டிகோ போபியா
4. உலகின் சிறிய கடல் எது?
அ) ஆர்டிக் கடல்    ஆ) பசிபிக் கடல்
இ) அன்டார்டிகா கடல்    ஈ) அட்லான்டிக் கடல்
5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
அ) கிரிக்கெட்    ஆ) கூடைப்பந்து
இ) கால்பந்து    ஈ) செஸ்
6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
அ) ரவிவர்மா    ஆ) டேவிட் வர்மா
இ) மைக்கல் ஏன்ஜலோ    ஈ) ஆஸ்டின்
7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அ) அல் கொய்தா    ஆ) அல் ஜசீரா
இ) மாவோயிஸ்ட்    ஈ) நக்சலைட்
8. டில்லி முதல்வர் பெயர் என்ன?
அ) ஷீலா தீட்சித்    ஆ) மாயாவதி
இ) நிதிஸ் குமார்    ஈ) மோடி  
9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?
அ) ஜப்பான்    ஆ) நியூசிலாந்து
இ) பிரேசில்    ஈ) பாகிஸ்தான்
10.  லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
அ) கிரிக்கெட்    ஆ) டென்னிஸ்
இ) பாட்மின்டன்    ஈ) கால்பந்து
11. சீனாவின் தலைநகரம் எது?
அ) தாய்லாந்து    ஆ) பீஜிங்
இ) ஹாங்காங்    ஈ) சிட்னி
12. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?
அ) காவிரி    ஆ) சட்லஜ்
இ) பிரம்மபுத்ரா    ஈ) ரவி
13. பாரதியார் பிறந்த ஊர் எது?
அ) பூம்புகார்    ஆ) மதுரை
இ) எட்டயபுரம்    ஈ) மயிலாப்பூர்
14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?
அ) நரி    ஆ) புலி
இ) சிறுத்தை    ஈ) பூனை
15. தமிழகத்தின் பரப்பளவு?
அ) 130,058 சதுர கி.மீ.,    ஆ) 10,000 சதுர கி.மீ.,
இ) 22,500 சதுர கி.மீ.,     ஈ) 99,338 சதுர கி.மீ.,
விடைகள்: 1(அ), 2(இ), 3(ஈ), 4(அ), 5(ஆ), 6(இ), 7(அ), 8(அ),
                  9(இ), 10(அ),11(ஆ), 12(இ), 13(இ), 14(அ), 15(அ)

புயலின் உருமாற்றம்

ஐயாவையும் பிடிக்கும், அம்மாவையும் பிடிக்கும் என்று மஞ்சள் கோடு தாண்டாமல் வண்டி ஓட்டியவர் மதுரைப் புயல். நேற்று இந்தப் புயல் கரை கடந்தது. இந்த மாற்றத்துக்கான காரணம் அவரது மதுரை எதி‌ரி அம்மா பக்கம் சாய்ந்தது என்று சொல்லிக் கொண்டாலும் புயலை ஐயா பக்கமாக வீச வைத்தவர் அஞ்சாத மனம் படைத்தவர்தானாம்.மதுரை ஹீரோ வெற்றி பெற்றால் அது மதுரையை மையமாகக் கொண்டு திகழும் அஞ்சாதவருக்கு கொஞ்சம் இழுக்குதான். இதனால் மதுரை மைந்தன் என்ற ஹீரோவின் இமேஜை உடைக்க அதே ஊரைச் சேர்ந்த புயலை களம் இறக்கிவிட்டிருக்கிறார் என்கிறார்கள். புயல் ஆலயத்துக்கு வந்ததற்கான பின்னணி இதுதான் எனகிறார்கள் புன்னகையுடன்.

History of chemistry


By 1000 BC, ancient civilizations used technologies that would eventually form the basis of the various branches ofchemistry. Examples include extracting metals from ores, making pottery and glazes, fermenting beer and wine, making pigments for cosmetics and painting, extracting chemicals from plants for medicine and perfume, making cheese, dying cloth, tanning leather, rendering fat into soap, making glass, and making alloys like bronze.
Early attempts to explain the nature of matter and its transformations failed. The protoscience of chemistry,Alchemy, was also unsuccessful in explaining the nature of matter. However, by performing experiments and recording the results the alchemist set the stage for modern chemistry. This distinction begins to emerge when a clear differentiation was made between chemistry and alchemy by Robert Boyle in his work The Sceptical Chymist(1661). Chemistry then becomes a full-fledged science when Antoine Lavoisier develops his law of conservation of mass, which demands careful measurements and quantitative observations of chemical phenomena. So, while both alchemy and chemistry are concerned with the nature of matter and its transformations, it is only the chemists who apply the scientific method. The history of chemistry is intertwined with the history of thermodynamics, especially through the work of Willard Gibbs.[1]

history of india


The history of India begins with evidence of human activity of Homo sapiens as long as 75,000 years ago, or with earlier hominids including Homo erectus from about 500,000 years ago. The Indus Valley Civilization, which spread and flourished in the northwestern part of the Indian subcontinent from c. 3300 to 1300 BCE, was the first major civilization in India. A sophisticated and technologically advanced urban culture developed in the Mature Harappan period, from 2600 to 1900 BCE. This Bronze Age civilization collapsed before the end of the second millennium BCE and was followed by the Iron Age Vedic Civilization, which extended over much of the Indo-Gangetic plain and which witnessed the rise of major polities known as the Mahajanapadas. In one of these kingdoms, MagadhaMahavira and Gautama Buddha were born in the 6th or 5th century BCE and propagated their śramanic philosophies.
Almost all of the subcontinent was conquered by the Maurya Empire during the 4th and 3rd centuries BCE. It subsequently became fragmented, with various parts ruled by numerous Middle kingdoms for the next 1,500 years. This is known as the classical period of Indian history, during which India has sometimes been estimated to have had the largest economy of the ancient and medieval world, controlling between one third and one fourth of the world's wealth up to the 18th century.
Much of northern and central India was once again united in the 4th century CE, and remained so for two centuries thereafter, under the Gupta Empire. This period, witnessing a Hindu religious and intellectual resurgence, is known among its admirers as the "Golden Age of India". During the same time, and for several centuries afterwards, southern India, under the rule of the ChalukyasCholasPallavas, andPandyas, experienced its own golden age. During this period, aspects of Indian civilization, administration, culture, and religion (Hinduism and Buddhism) spread to much of Asia.

for known

Egypt believes that Russia will soon drop its recommendation to avoid visits to Egyptian resorts as the flow of Russian tourists is indispensable to help the country return to normal

Friday, 18 March 2011

உதயநிதி பெரிய நடிகரா வருவார்! டைரக்டர் ஆரூடம்!!


தமிழக முதல்வர் கருணாநிதியின் பேரன், துணை முதல்வர் ஸ்டாலினின் மகன், பிரபல சினிமா தயாரிப்பாளர் உள்ளிட்ட அந்தஸ்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு நடிகராக திரையுலகில் பளிச்சிடத் தயாராகி களத்தில் இறங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தனது ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை வாங்கி வெளியிட்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கும் உதயநிதி, ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓ.கே. ஓ.கே.) படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இயக்கிய டைரக்டர் ராஜேஷ்தான் ஓ.கே.ஓ.கே. படத்தை இயக்குகிறார். படத்தில் உதயநிதி ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். தனது முந்தைய படங்களில் ஹீரோக்களுடனே வந்து காமெடியில் கலக்கிய சந்தானமும் இந்த படத்தில் ஹீரோ உதயநிதியுடன் உலா வரவிருக்கிறார்.
இப்புதிய படம் குறித்து டைரக்டர் ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் சூட்டிங் தொடங்கி விட்டது. நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். அவர் கலைக்குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ நடிப்பு நன்றாக வருகிறது. ரிகர்சல் ஆரம்பித்ததில் இருந்தே ரொம்பவே ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். இந்த படம் வெளியான பிறகு உதயநிதி பெரிய நடிகரா பளிச்சிடுவார் என்பது மட்டும் நிச்சயம், என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை சென்னை மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள் கோயிலில் சென்டிமெண்ட்டாக நடத்தியிருக்கிறார் டைரக்டர் ராஜேஷ்.