Wednesday, 20 April 2011

அந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா



கோகிலா வீட்டைப் பூட்டிக்கொண்டு படி இறங்கினாள்.
பக்கத்து வீட்டு நீலா மாமி கேட் அருகேயே நின்றிருந்தாள்.
“மாமி அவர் அசந்து தூங்கிண்டிருக்கார்.தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு கதவை வெளிலே பூட்டிண்டு வந்துட்டேன். நான் வர ஒரு மணி நேரம் ஆகும். ஒண்ணு ரெண்டு தரம் ஜன்னல் வழியா எட்டிப் பாருங்கோ. கதவைத் திறந்துண்டு பெட் ரூமுக்குள்ள போயி பாக்க வேண்டாம்.  நான்தான்னு நினைச்சி கையை பிடிச்சி இழுத்துடுவார். அவர் எழுந்தார்ன்னா வீட்டைத் திறந்து விட்டு சாவியை அவரண்ட குடுத்துடுங்கோ. நான் சொன்னேன்னு சொல்லுங்கோ. கோபிச்சிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்கோ. முடிஞ்சா காபி போட்டு குடுங்கோ”
மாமி சாவியை வாங்கிக் கொண்டாள்.
கோகிலா போன பிறகுதான் அன்று வியாழக் கிழமை, ராகவேந்திர சுவாமி கோயிலுக்கு போக வேண்டும் என்று மாமிக்கு நினைவு வந்தது.
“டேய் கோண்டு, இந்தா இது அடுத்தாத்து சாவி. அந்த மாமி வெளிலே போயிருக்கா. கதவை வெளிலே பூட்டியிருக்கா. உஷா காலேஜ் லேர்ந்து வந்தா அவாத்தை திறந்து சாவியை மாமா கிட்ட தரச்சொல்லிடு. நேர உள்ள போக வேண்டாம்ன்னு சொல்லு. அந்த மாமா கையை புடிச்சி இழுத்துடுவார். கோகிலா கோயிச்சிக்க வேண்டாம்ன்னு சொன்னான்னு சொல்லணும். காபி போட்டு தரணும்.”
மாமி போய் விட்டாள்.
கொஞ்ச நேரம் கழித்து உஷா வந்தாள். கோண்டு சாவியை அவளிடம் கொடுத்து
“அக்கா, அம்மா இந்த சாவியை உன்னண்ட தரச்சொன்னா. கோகிலா மாமி வெளிலே போயிருக்காளாம். அதனாலே கதவைத் திறந்துண்டு உள்ளே போகணுமாம். அந்த மாமா கையை பிடிச்சி இழுப்பாராம்.கோயிச்சிக்க வேண்டாமாம். அவருக்கு காபி போட்டு தரணுமாம்.” என்றான்.
கம்யூனிகேஷன் செய்கிறவரும் கேட்கிறவரும் தெளிவாக இல்லாவிட்டால் என்ன நேரும் என்பதற்காக பயிற்ச்சி வகுப்புகளில் நான் சொல்கிற கதை இது.
மற்றபடி அடுத்த வீட்டு மாமா கையை பிடித்து இழுத்ததாகவும் அவரைத் தான் செவிட்டில் அறைந்ததாகவும் உஷா என்கிற பெயரில் யாராவது சொல்வதைக் கேட்டால் அந்த சம்பவத்தோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டாம்.

A – கிளாஸ் ஜோக்ஸ்....


ஐம்பத்து நாலு வயதான அந்த அக்கவுண்டன்ட் மனைவியின் டார்ச்சர் தாங்காது ஒரு நாள் காணாமல் போய் விட்டார். மனைவியை வெறுப்பேற்ற ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார்.
“நாளை காலை நானும் என் பதினெட்டு வயது செகரட்டரியும் கொடைக்கானலில் ஹோட்டலில் ஜாலியாக இருப்போம்”
அடுத்த நாள் காலை ஹோட்டல் மேனேஜர் ஒரு பேக்ஸ் ஐ நீட்டினார். அது அவர் மனைவியிடமிருந்து வந்திருந்தது.
“என்னையும் உங்கள் பதினெட்டு வயது குமாஸ்தாவையும் தனியாக விட்டுச் சென்றதற்கு நன்றி. உங்கள் அக்கவுண்டன்ட் புத்திக்கு உறைக்காத விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஐம்பத்திநாலில் பதினெட்டு மூன்று தரம் போகும். ஆனால் பதினெட்டில் ஐம்பத்திநாலு போகவே போகாது”

பெண் பேயிடம் ஒரு கேள்வி!


ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை  சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், “நான் உன்னை உயிருக்குயிராக  நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை.  நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று  எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால்,  தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன் “,  என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.
அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள்.  அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள்.  அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான். கதையைக்கேட்ட ஜென் துறவி, “இந்தப் பேய் மிகவும் புத்திசாலியானப் பேய்தான்” என்கிறார். ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற , செய்கிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான்.  அத்துறவியோ புன்னகைத்தபடி, “அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ  பெருமைப்பட வேண்டும்” என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்!
அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், “உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை,  அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும்  நீ விடை சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்கிறான்.
சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய  அள்ளி, ” என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்” என்கிறான். அவ்வளவுதான்,  அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!
என்ன, கதையைக் கேட்டாச்சா?  சரி, இப்போ நாம இந்தப்பதிவோட முக்கியமான செய்திக்கு வருவோம். அதாவது, கதை சொல்வதும் அதை புரிந்து கொள்வதும் ஒரு கலையாம். பெரும்பாலும் மக்கள், கதைகளில் வரும் வார்த்தைகளையும், கதையையும் மட்டுமே புரிந்துகொள்கிறார்களே தவிர, கதையின் அடிப்படைக் கருத்தை (மையக்கருவை) புரிந்துகொள்வதில்லையாம். அது எப்படி என்கிறீர்களா? உதாரணத்துக்கு இக்கதையையே எடுத்துக்கொள்வோம். இக்கதையைக் கேட்ட/படித்த சிலர் என்ன சொன்னார்கள் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்….
“யாருக்குமே எல்லாம் தெரிவதில்லை. பேய்களுக்கு கூடத்தான். சில வகையில் வேண்டுமானால் நாம் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் எல்லா வகையிலும் அல்ல”
“அந்த பேய் ஏன் திரும்ப திரும்ப வந்தது என்றால், எப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறது இந்தப் பேய் என்று அவன் எப்பொழுதும் ஆச்சரியப்பட்டான். அதனால், அந்தப் பேய் அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஒரு நாள்  எதிர்த்து நின்று தைரியமாக அவன் கேள்வி கேட்டவுடன் அந்தப் பேய் ஓடிவிட்டது”
“அவனில் ஒரு பகுதிதான் அந்தப் பேயே! அதனால், அவனுக்குத் தெரியாத எதுவும் அந்தப் பேய்க்கு தெரியவில்லை”
” அவனுடைய மனதிலிருந்துதான் அந்த பேய் வருகிறது. அதை உருவாக்கியவனும் அவனேதான். அவனுடைய குற்ற உணர்வுதான் பேயாக வந்து அவனை துன்புறுத்துகிறது”
” நாம் பயப்படுவதால்தான் எதுவுமே நம்மை பயமுறுத்துகிறது. அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது”
இன்னும் சிலர்…..
“எனக்கு இந்தக் கதையின் முடிவு பிடிக்கவில்லை. நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் நான் இந்த கதையை படிக்கத் தொடங்கினேன். கடைசியில் சப்பென்றாகிவிட்டது”
“ஆமாம் , அவன் ஒரு ஜென் துறவியைச் சந்தித்தான் என்று ஏன் அந்தப் பேயால் கண்டுபிடிக்க முடியவில்லை?”
ஒரே கதையை படித்தவர்களின் புரிதல்கள் எத்தனை விதத்தில் இருக்கிறதென்பதை கவனித்தீர்களா? ஆக, கதை ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தில் அது பல்வேறு விதமாக திரிந்து, கடைசியில் கதையின் அடிப்படைக் கருத்து காணாமல் போய்விடுகிறது. இதுபோலத்தான் நம் பயங்களும், வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளும்!
உண்மையில் பேய்கள் என்பது நம் பயங்களும், மனதில் ஏற்பட்டு நம்மை அலைக்கழிக்கும் ஒரு வித உளவியல் நோய்களுமே. அத்தகைய பயங்களை உருவாக்கி நம்மை இம்சிப்பதே நம் மூளைதான். அது பயங்களையும் உருவாக்கும், அதேசமயம் வேறு யாரோ ஒருவர் வந்து நம்மை பயமுறுத்துவது போல புலம்பவும் செய்யும்! ஆக, நம் பயங்களுக்கும் துன்பங்களுக்கும் நம் மூளைதான் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.
இதைத்தான் சொல்கிறது ஜென் வரலாறு. ஜென் துறவிகள் நம் கற்பனைப் பேய்களைவிட (மனித மனங்கள்!) அதிபுத்திசாலிகளாம். ஆனால், ஜென் துறவிகள் ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே இருக்கின்றனர்(பேய்கள் எங்கே இருக்கின்றன?). அவர்கள் சொல்வது என்னவென்றால், பேய்கள் என்பவை  நம் எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும்தான்.  பயப்படுவதற்கும், துன்பப்படுவதற்க்கும் நாம் விரும்பவில்லை என்றால் வேறு ஒருவர் வந்து  நம்மை எப்படி துன்புறுத்த முடியும்? சற்று சிந்தியுங்கள்!
அதனால், நாம் உருவாக்கிய பேய்களை (பயம், பற்று, எதிர்ப்பார்ப்பு, ஆசை, போதை….) நாமேதான் அழிக்க வேண்டும். மொத்தத்தில் பேய்கள்  நம்மைப் போன்ற உருவமில்லாதவை, வெறும் மனப் பிரம்மைகள்தான்! அவற்றை தூக்கி எறிந்துவிட்டு சென்றோமானால், நலமான வளமான வாழ்வை வாழலாம்!

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்.!

யு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!



தேஜா வு (Deja vu)


“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!
இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!

பேய்/பிசாசு/ஆவி


நம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும்.  எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ!  சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது  ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!

மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு!  ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே,  நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

top10_phenomena_intuitionநம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

மனிதன் போன்ற மிருகம்/Bigfoot

bigfoot3பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா  நெறைய பேர் சொல்லியிருக்காங்க!  அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?!  ஆனா அப்படி ஒன்னையும்  இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை!  வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!

டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!
எழுதின எனக்கே ஒரு மர்மதேசம் போய்ட்டு வந்த மாதிரி இருக்குதுன்னா…..அதாங்க, வின்னர் வடிவேலு மாதிரி, “அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த கதின்னா….அடிவாங்குனவன் கதி என்னவோ”?!, இப்படி பதிவப் படிச்ச உங்களுக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க!

இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)

நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து,  சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை!  இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!


உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?!  அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.
இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….
நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு  மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!

ஆண்களுக்கு மத்தியிலான போட்டியின் வெற்றி-தோல்வியும், இழப்புகளும்!


பெண்களைக் கவர்ந்து வாழ்க்கையில் ஜெயித்துவிட ஆண்கள் ஈடுபடும் வீர தீரச் செயல்களும், அதன்விளைவாக அவர்களின் வாழ்நாளும்/ஆயுட்காலமும் பொருளாதாரச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது என்று கண்டறிந்துள்ளார் க்ரூகர்! அதாவது, சுமார் 70 நாடுகளின், ஆண்களின் துணையைத் தேர்ந்தெடுக்கும் போட்டியை ஊக்குவிக்கும்/பாதிக்கும் கலாச்சார மற்றும் பண்பாட்டு காரணிகளை ஆராய்ந்ததில்,“பொருளாதார ஏற்றத்தாழ்வு  மற்றும் ஒருவரின் செக்ஸ் உறவு வெற்றி இரண்டும்ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன, மாறாக பெண்களோ இவ்விரண்டினால் பாதிக்கப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது! (பார்ரா…..இது வேறயா?)
ஆனால், பொருளாதார சமநிலை மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளற்ற/குறைந்த நாடான நார்வே போன்றவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவில் ஆனால் சராசரியாக ஆண்களைவிட பெண்கள் 4.5 வருடம் அதிகம் வாழ்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது! ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  நிறைந்த, பணக்கார மற்றும் ஏழை மக்கள் வாழும் கொலம்பியா போன்ற நாடுகள்,  ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்கள் பெண்களை விட விரைவில் இறந்தவிடுகிறார்கள்! காரணம், அந்த ஆண்கள்  அந்தஸ்த்து, பணம் இறுதியில் செக்ஸ்/காதலுக்காக வன்முறை, மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிறார் க்ரூகர்! விளைவு, ஆண்-பெண் இறப்பி விகித வித்தியாசம், கொலம்பியாவில் 7.8 வருடங்கள், அமெரிக்காவில் 5.2 வருடங்களால். அதாவது, பெண்களைக்காட்டிலும் ஆண்கள் சீக்கிரம் இறந்துவிடுகிறார்கள்! என்ன கொடுமை சார் இது?!
இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்னன்னா, கற்பனையான பொருளாதார ஏற்றத்தாழ்வு கூட ஆண்களின் ஆயுட்காலத்தை பாதிக்கிறதாம்?! உதாரணமா, அந்தஸ்த்து சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகளான எம்.டிவி (MTV) போன்றவை பணக்காரத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனவாம்?! விளைவு, அம்மாதிரியான தொலைக்காட்சி அலவரிசைகளைப் பார்க்கும் ஆண்கள், “ம்ம்ம்….நானும்கூட இது மாதிரியான விலை உயர்ந்த பொருட்கள்/பணம் எல்லாம் சம்பாதிக்கனும்” அப்படீன்னு அவங்களோட எதிர்பார்ப்புகளும் பல மடங்கு கூடிவிடுகிறது என்கிறார் க்ரூகர். அப்புறம் என்ன சும்மாவா இருப்பாங்க, பார்த்ததையெல்லாம் சம்பாதிக்க இரவு பகலா உழைக்கிறது, அது வாங்கனும்  இது வாங்கனும்னு மன உளைச்சலை அதிகப்படுத்திக்கிறதுன்னு “ஒரே ரணகளாமாயிடும் வாழ்க்கை”!
ஒருவனுக்கு ஒருத்தியும், ஒருவனுக்கு பல பெண்களும்!
“ரெண்டு பெண்டாட்டிக்காரன் திண்டாட்டக்காரன்” அப்படீன்னு நம்ம ஊருல சொல்லிக்கேட்டதுண்டு! இப்போதான் தெரியுது அது விஞ்ஞானப்பூர்வமாவும் உண்மைன்னு! ஆமாங்க, பாலிகைனி (polygyny) அப்படீங்கிற ஒருத்தர் பல பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் வழக்கத்துக்கும் ஆண்கள் இறப்பு விகிதத்துக்கும் தொடர்பிருக்குதாம். அதாவது, பாலிகைனி வழக்கத்துல ஒரே ஆண் (அந்தஸ்த்தில் உயர்ந்தவன்) பல பெண்களை மணந்து குழந்தைபெறுவதால், அந்தஸ்த்து ஏணியில் கீழே இருக்கும் மீதமுள்ள ஆண்களுக்கு தன் பெண்களை மணந்து தன் சந்ததியை உருவாக்கும் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறதாம்?!
இதுமாதிரியான பாலிகைனி வழக்கத்துனால ஒருத்தருக்கு சமுதாய அந்தஸ்த்து ஏணியில விரைவாக மேலே போகிற வாய்ப்பும்,  லாபங்கள்/பலன்கள் இருந்தாலும், அதெல்லாம் சும்மா வர்றதில்ல, பல ஆபத்துகள்  அப்புறம் சமயத்துல இறப்பு இப்படியான விஷயங்களோடதான் வருதூங்கிறாரு ஆய்வாளர் க்ரூகர்! அது சரி…?!
ஆனா, இது மாதிரியான பாலிகைனி/செக்ஸ் போட்டிகள்ல ஆர்வமில்லாத ஆண்கள் (காரணம் பெரும்பாலும் நல்ல குடும்பத்தோட சந்தோஷமா இருக்கிறது அல்லது வாழ்க்கையில வேறு லட்சியங்களை அடைய முனைவது) பெண்களைக் கவர ஆபத்து நிறைந்த செயல்கள்ல ஈடுபடுறது இல்லைன்னு இன்னபிற ஆய்வுகள் சொல்கின்றனவாம்!
ஆக மொத்தத்துல, இந்த ஆய்வு என்ன சொல்லுதுன்னா, “ஒருவனுக்கு ஒருத்தியா (monogamous) சமுதாய/பொருளாதார ஏற்றத்தாழ்வுகளற்ற நாடுகள்/சமூகத்தில் வாழும் ஒரு ஆணின் வாழ்நாள் செழிப்பாக/மகிழ்ச்சி நிறைந்த இருக்கும்” என்கிறது!
அதனால, “ரதிகளைத் தேடி, அடைந்துவிடவேண்டி ஆபத்துகள்/மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நமக்கு பொருத்தமா ஒரு சங்கீதாவை, சாதனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்க்கையை வாழ எத்தனிக்கிறது எல்லா ஆண்களுக்கும் சாலச்சிறந்தது” அப்படீங்கிறாரு க்ரூகர்!
“காதல்/கல்யாணம் பண்ணா தமன்னா/அசின்/நயன்தாரா மாதிரி ஒரு வெயிட்டான ஃபிகரைத்தான் காதலிக்கனும்/கல்யாணம் பண்ணனும் அப்படீன்னு நினைக்கிறது உள்ளுணர்வு சார்ந்த ஒரு உந்துதல் என்றாலும் அந்த மாதிரியான உள்ளுணர்வுகள் ஒரு மனிதனோட வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அப்படீங்கிறதுக்கு எந்தவொரு உத்திரவாதமுமில்லை” என்பதுதான் இந்த ஆய்வு முன்வைக்கும் கருத்து!
ஆக, “ஆண்கள் செக்ஸுக்காக உயிரை கொடுக்கத் தயாராயிருக்காங்க அப்படீங்கிறது அவங்க பரிணாம வளர்ச்சியோட ஒரு அங்கமாவே இருந்துவருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் பெண்களை விட ஏன் ஆண்கள் விரைவில் இறந்து போறாங்க” அப்படீங்கிறத ஓரளவுக்கு இந்த ஆய்வு விளக்க முயற்ச்சி பண்ணுது அப்படீங்கிறாரு க்ரூகர்!
இதப் படிச்சதுக்கப்புறம் எனக்கு என்ன தோனுது/புரியுதுன்னா, “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” அப்படீன்னு ஒத்தக் கால்ல நிக்காம, நமக்கு ஏத்தமாதிரி இருக்குற ஒரு தமன்னாவையோ இல்ல அசினையோ , காதலிச்சோ இல்ல பெற்றோர் பார்த்து வச்சோ கல்யாணம் பண்ணிக்கிட்டு, கடைசி வரைக்கும் ஒருவனுக்கு ஒருத்தியாசந்தோஷமா, இல்லறம் அப்படீங்கிற நல்லறத்தைக்  கடைப்பிடிச்சி வாழ முயற்ச்சிக்கிறது புத்திசாலித்தனம்னு தோனுது!
உங்களுக்கும் இப்படியேதான் தோனனும்னு எந்தக் கட்டாயமுமில்லை. அதனால, கண்டிப்பா சில/பல பேருக்கு வேற மாதிரிக்கூட தோனலாம். அப்படித்தோனுறவங்க, முடிஞ்சா ஒரு மறுமொழிய எழுதிட்டுப்போங்க. சரி நான் கெளம்புறேன்!

செக்ஸ்: உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!!


ஏய்…..ஏய்….நிப்பாட்டு! ஆமா, இப்போ எதுக்கு பாட்டெல்லாம் பாடுற நீ? என்ன சொல்ல வர்ற இப்போ?! அப்படீன்னு கேக்குறீங்களா? சரி, உண்மையச் சொல்லுங்க. இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில, மேலே இருக்குற அந்தத் தத்துவப் (?) பாடல (இல்லைன்னா இது மாதிரியான ஒரு பாட்டை) ஒரு முறைகூட நீங்க உங்களுக்குப் பிடிச்ச/ரசிச்சப் பொண்ணப் பார்த்து பாடவே இல்லைன்னு சொல்லுங்க? கண்டிப்பா பாடியிருப்பீங்க, குறைந்தபட்சம்  மனசுக்குள்ளேயாவது பாடியிருப்பீங்க! என்ன ஆமாந்தானே?!
“சரி, பாடியிருப்போம். அதுக்கு என்ன இப்போ” அப்படீன்றீங்களா? அது வேற ஒன்னுமில்லீங்க, நாம ஏன் நமக்கு பிடிச்ச பொண்ணைப் பார்த்தா இந்த மாதிரியெல்லாம் பாட்டு பாடுறது, பல்டி அடிக்கிறது, சைக்கிளை கையை விட்டுட்டு ஓட்டுறது,  இப்படி எதாவது வீர தீரச் செயல்கள் ஏதாவது பண்ணி பொண்ணுங்களை கவர முயற்ச்சிக்கிறோம்னு எனக்குள்ள ரொம்ப நாளா ஒரு கேள்வி இருந்துச்சி! ஆமா, ஏன் இப்படியெல்லாம் செய்யுறோம்னு சொல்லுங்க?
“ஏய், என்னாதிது…..செந்தில் கவுண்டமணிகிட்ட கேக்குற மாதிரி ஒரு இத்துப்போன கேள்வி” அப்படீன்னு கோபப்படாதீங்க! ஏன்னா, நான் கேட்ட அந்தக் கேள்வியில காரணம் இருக்கு. அதுக்கு மேலோட்டமா பதில் சொன்னீங்கன்னா, “பிடிக்கிற அந்தப் பொண்ணை காதலிச்சு, கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டி பெத்து வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கனும்”னு சொல்லுவீங்க.
ஆனா, அதே கேள்விக்கு உளவியல் பூர்வமான பதில் சொல்ல முயற்ச்சி பண்ணினா எப்படி இருக்கும்? அதுமட்டுமில்லாம,  நாம சமயங்கள்ல உயிரை துச்சமா மதிச்சி, நமக்கு பிடிச்ச பொண்ணை அசத்த முயற்ச்சிக்கிறதுனால, நமக்கு ஏற்படும் நன்மை/தீமைகள், லாப/நஷ்டங்கள் என்ன, அது எந்த அளவுக்கு அவசியம்/அனாவசியம் இப்படியான பல கேள்விகள/விஷயங்களத்தான், இனிமே இந்தப் பதிவுல நாம உளவியல் ரீதியா   பார்க்கப் போறோம்……


இனப்பெருக்க ரீதியில பார்த்தோம்னா, எதிர்பாலினத்தை கவர்வதற்க்காக செய்யும் சில வீரமான/ஆபத்து நிறைந்த செயல்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். பலனாக அவர்களுக்கு லாபமே அதிகம் நஷ்டமில்லை என்கிறது இதுவரையிலான ஆய்வுகள்! ஏன்னா, எடுத்துக்கிட்ட அந்த செயலில் வெற்றிடைந்து, விரும்பிய பெண்ணை அடைவதன்மூலம், குறைந்தபட்சம் அவன் சந்ததி தொடரும்/வளரும் வாய்ப்பையாவது உருவாக்கிவிடுகிறான் ஆண். அதன்பின் அவன் இறந்தாலும் அது ஒரு பொருட்டல்ல இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரை, காரணம் அவன் சந்ததி உருவாகிவிட்டது!
“பரிணாமத்தில் ஒரு விளையாட்டு உண்டு. அது உன் மரபனுக்களை அடுத்த சந்ததிக்கு லாவகமாகக் கடத்திச் செல்வதே” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேனியல் க்ரூகர் (Daniel Kruger of the University of Michigan)
ஒரு தந்தை இல்லாத குழந்தையின் கல்வியும், சமுதாயத்தில் வெற்றியும் கேள்விக்குறியாகலாம். ஆனால், ஒரு தாயில்லாக் குழந்தையின் நிலை பரிதாபத்துக்குரியது. அது தாயால் பிறந்த சில வருடங்கள் கழித்து தனித்து விடப்பட்டுவிட்ட குழந்தையானாலும்! இதற்க்கு, வளரும் நாடுகளின் ஆதரவற்றோர்/ஆனாதைக் குழந்தைக் காப்பகங்களின் எண்ணிக்கையே சரியான சான்று! ஆக, பெண்கள் ஆண்களைப்போல, காதலுக்காக உடல் ரீதியிலான, ஆபத்தான வீர தீரச் செயலகளிலெல்லாம் ஈடுபடுவதை தவிர்த்துவிடுகிறார்கள் பரிணாம வளர்ச்சியின்படி என்று யூகிக்கிறார் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆன்னீ கேம்பெல் ( Anne Campbell of Durham University in England)
ஆனால், இதற்க்கு நேர் எதிராக இருக்கும் ஆண்கள், தனக்குப் பிடித்தப் பெண்ணை/அழகான பெண்களை எப்படியாவது கவர்ந்து/ஈர்த்துவிட வேண்டி எதாவது ஒரு ஆபத்தான செயலில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்! (கீழே இருக்குற படத்துல நீங்க பார்க்கிற மாதிரி?!)
குழந்தைப் பெறுதல் மற்றும் குழந்தை வளர்ப்பு என்னும் இரு உடல்வருத்தும்/உடலுழைப்பு சார்ந்த பொறுப்பை ஏற்கவேண்டிய பெண்கள், பொறுப்பான அல்லது திறமைமிக்க ஆண்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஆண்களுக்கு நன்றாகத் தெரியும் (அடிமனதிலாவது இருக்கும்!). இங்கே திறமை/பொறுப்பு என்பது சமுதாயத்தில் அந்தஸ்து மற்றும் பொருட்செல்வம் என்னும் இரு அளவுகோள்களால் கணிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க என்கிறார் க்ரூகர்!
பரிணாமப்படி பார்த்தால், தன் புகழை/திறமையை நிலைநாட்டவும், பின்பு அதை விளம்பரம்படுத்தவும் , பெரும்பாலும் வன்முறை, வீர தீரச் செயல்கள் மற்றும் பல்வேறு வகையான ஆபத்து நிறைந்த செயல்களையே தொன்றுதொட்ட காலத்திலிருந்து ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் ஆண்கள் என்பது புலப்படும்! இம்மாதிரியான யுக்திகள், இன்றுவரையிலும் தொடர்கின்றன என்பதற்க்கு தன் க்ரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பனமதிப்பையும் காட்டி பெண்களை கவரும்/கவர முயற்ச்சிக்கும் சில/பல இன்றைய ஆண்களே சரியான சான்று!
தொடர்புடைய ஒரு காணொளி…..


Tuesday, 12 April 2011

சவிதா!

சவிதா பாபி ஒரு நடுத்தர வயது குடும்பப் பெண். கொஞ்சம் மாடர்னாக இருப்பாள். சேலைதான் அணிவாள். கோதுமை நிறம். நல்ல உயரம். மதமதர்த்த உடல்வாகு. அந்தக் காலத்து கர்ணன் பட கதாநாயகிகள் மாதிரி மாராப்பு விஷயத்தில் தாராளம். திருமணமான இவருக்கு தனிப்பட்ட தாம்பத்ய வாழ்க்கையில் போதிய திருப்தி இல்லை. எனவே சவிதா எப்போதும் செக்ஸுக்காக அலைந்துக் கொண்டிருக்கிறாள். சவிதா என்பது அவள் பெயர். பாபி என்றால் இந்தியில் அண்ணி என்று பொருள்.

அவளுடைய காமத்தேவைகளுக்கு இரையாவது வீடு வீடாக பிரா விற்கும் சேல்ஸ்மேன், கிரிக்கெட் விளையாடும் ஸ்கூல் பசங்க, பேமிலி டாக்டர், கஸின்... இப்படியெல்லாம் வக்கிரமாக, வரைமுறையற்ற காம சிந்தனைகளோடு சித்தரிக்கப்படும் படக்கதைத்தொடர் (காமிக்ஸ்) ஒன்று இந்தியாவில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது தெரியுமா?

வேறெங்கு? நம்ம இண்டர்நெட்டில் தான். பல வருடங்களாக ‘பிட்டு, பிட்டாக’ ஆங்காங்கே போடப்பட்டு வந்த இந்த கதைத்தொடர், கடந்த மார்ச் 2008ல் பிரத்யேக தனி இணையத்தளம் ஒன்றில் தோன்றி சக்கைப்போடு போட்டது. குறிப்பிட்ட அந்த இணையத்தளத்தில் வெகுவிரைவில் ஐம்பதாயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்தார்கள். மாதத்துக்கு ஆறு கோடி முறை அந்த இணையத்தளம் ரசிகர்களால் சுடச்சுடப் பார்வை இடப்பட்டது. இந்தியாவில் அதிகம் பார்வையிடும் இணையத்தளங்களின் பட்டியலில் 82வது இடத்தைப் பிடித்த இணையத்தளம் அது. ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட பத்து இந்திய மண்டல மொழிகளிலும் இந்த களத்தில் கதைகளை படிக்கலாம்.

அப்படி என்னதான் சவிதாபாபி இணையத்தளத்தில் இருக்கிறது என்று குறுகுறுப்பு வருமே?
சவிதா ஒரு ஆடம்பரமான அபார்ட்மெண்டில் வசிக்கிறாள். அவளது கணவன் அசோக் ஒரு தேவாங்கு. கம்பெனி ஒன்றில் நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். வீட்டு வேலை பார்ப்பதில்லை. தாம்பத்யம் அவனுக்கு எப்போதாவது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி.

சவிதாவோ தாம்பத்திய சுகத்துக்கு ஏங்குகிறாள். வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரனில் தொடங்கி, அவளுடன் பழகும் பல ஆண்களோடு திகட்ட, திகட்ட உறவு கொள்ளுகிறாள். கடைசியாக ஒரு பிரபல நடிகனோடும் கூட. சவிதாவின் செக்ஸ் அனுபவங்கள் மட்டுமே சதைகள். மன்னிக்கவும், கதைகள். கதைகளுக்கான தலைப்புகள் கூட வித்தியாசமாக இருக்கும். உதாரணத்துக்கு, சேல்ஸ்மேன் கதைக்கு “பிரா விற்பனையாளனின் விசிட்”,
நம்மூரின் வழக்கமான மூன்றாந்தர பிட்டு படங்களின் கண்ணறாவி கதைகள் தான் சவிதா பாபி கதைகளும். மொத்தம் பண்ணிரண்டு கதைகள் இந்த தொடரில் வண்ணச் சித்திரங்களோடு வெளிவந்திருக்கிறது. சவிதா கதை சொல்வதைப் போன்ற பாணியிலேயே எல்லாக் கதைகளும் அமைந்திருக்கின்றன. நகைச்சுவையும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.

ஆனால் பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்த பார்வையை தருகிறோம், ‘இந்தியப் பெண்களுக்கும் செக்ஸ் ஆசைகள் உண்டு’ (?) என்கிற யதார்த்தத்தை உலகுக்கு சொல்கிறோம் என்ற போர்வையில் அருவருக்கத்தக்க, வரைமுறையில்லாத செக்ஸ் கதைகளாக போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். இந்தியக் கலாச்சாரத்தில் மதிப்போடு பார்க்கப்படும் ‘அண்ணி’ என்ற உறவுமுறையை இதற்காக பயன்படுத்திக் கொண்டதும் ஆபாசத்தின் உச்சம்.

ஆயிரக்கணக்கான செக்ஸ் இணையத்தளங்கள் இருக்க, சவிதா பாபி தளம் அடைந்த பரபரப்பான புகழுக்கு ஒரே ஒரு காரணத்தை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். “எல்லா இணையத் தளங்களிலும் எடுத்த உடனேயே ‘முழுக்க’ காட்டி விடுகிறார்கள். ஒரேயடியாக எல்லாமே புஸ்ஸென்று அடங்கிப் போய்விடுகிறது. ஆனால் சவிதா பாபியோ கதைகளின் ஆரம்பத்தில் புடவை அணிந்திருக்கிறாள். செந்தூரம் வைத்திருக்கிறாள். தாலி கட்டியிருக்கிறாள். ஒவ்வொரு கதையிலும் கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏற்றுகிறாள். ஒவ்வொன்றாக அவிழ்க்கிறாள். இந்தப் போதை அளப்பறியது. அனுபவித்து பார்த்தால் தான் புரியும்” என்கிறார்கள்.

இத்தனைக்கும் மற்ற செக்ஸ் தளங்களில் நேரடியாக பெண்களின் அரை மற்றும் முழு நிர்வாணமாக போட்டோக்களே உபயோகப்படுத்தப் படுகிறது. சவிதா பாபியிலோ ஓவியரால் வரையப்பட்ட படங்கள்தான். “டைரக்ட் போட்டாவா இருந்தாலும் கூட சில ஆங்கிள்ஸை ரசிக்க முடியாது. சவிதா பாபியிலே வரையப்படுற ஆங்கிள்ஸ் நாம சற்றும் எதிர்பார்க்காதது. நம்ம கற்பனைக் குதிரைய தட்டிவிட்டு, தடதடன்னு ஆர்வத்தை தூண்டுது” என்று கிறங்கிப்போய் கிசுகிசுக்கிறார்கள் ரசிகர்கள்.

சவிதாபாபியை நடத்துபவர்கள் ஐரோப்பாவில் இருக்கிறார்கள் என்கிறார்கள். இந்தியாவில் போர்னோ சைட்டுகள் (செக்ஸ் இணையத்தளங்கள்) நடத்த தடை இருப்பதாலேயே, வெளிநாட்டு சர்வரில் இருந்து நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இண்டியன் போர்ன் எம்பயர் என்ற நிறுவனத்தின் பேரில் இந்த தளம் பதியப்பட்டிருக்கிறது. இந்த அற்புதமான இலக்கியத்தை எழுதுபவர் தேஷ்முக் என்றும் ஓவியங்கள் வரைபவர்கள் டெக்ஸ்டார் மற்றும் மேட் என்றும் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இவை பொய்யான புனைபெயர்கள்.

இந்த தளம் சரியாக சர்ச்சைக்கு கச்சை கட்டியது ஒரு நடிகனோடு சவிதா சல்லாபித்த கதை வந்தபோது. நடிகராக சித்தரிக்கப்பட்டு வரையப்பட்டது அமிதாப் பச்சனின் உருவம் என்பதால் வட இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு செக்ஸ் கதையில் எப்படி அமிதாப்பை தவறாக சித்தரிக்கலாம் என்று அவரது ரசிகர்கள் பாய்ந்தார்கள். ஆனால் தளத்தை நடத்துவது யாரென்றே தெரியாத நிலையில், காற்றில் கத்தி சுத்துவதைப் போல சில நாட்களுக்கு கொந்தளித்துவிட்டு பிறகு வேறு வழியில்லாமல் அடங்கிப் போனார்கள். இதே நேரத்தில் மும்பை மீடியாக்கள் பலவும் சவிதாபாபி தளம் குறித்த ஆபத்தை இந்திய கலாச்சார அமைச்சகத்துக்கு அலாரம் அடித்தார்கள். வழக்கம் போல பிரச்சினை கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

சவிதாபாபிக்கு இரையானவர்கள் பெரும்பாலும் டீனேஜர்கள். குறிப்பாக மாணவர்கள். இந்த கதைவரிசையை தொடர்ந்து வாசித்து வந்த பள்ளி மாணவன் ஒருவன், தனது ஆசிரியைக்கு ஆபாசமான எம்.எம்.எஸ். ஒன்றினை அனுப்பியபோது பெங்களூரே அதிர்ந்துப் போனது. இத்தனைக்கும் பயல் ஐந்தாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தான். அவசர அவசரமாக கர்நாடகா காவல்துறையின் சைபர் கிரிம் பிரிவு சவிதாபாபி தளத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதுமட்டுமன்றி தொடர்ந்து வந்த பல புகார்களின் அடிப்படையிலும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் சவிதாபாபி தளத்தை தடை செய்தது. ஆபாசம், ஆணாதிக்கம், பெண்களை பலவழிகளிலும் கொச்சைப்படுத்துவது என்று காரணங்களை அடுக்கியது. இந்த தளம் பொதுமக்கள் பார்வைக்கு தெரியப்படுத்தப்படக் கூடாது என்று இண்டர்நெட் சர்வீஸ் வழங்கும் சேவை நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டது.

சவிதாபாபியை தரிசிக்கும் கோடிக்கணக்கானவர்களில் 80 சதவிகிதம் பேர் இந்தியர்களாகவே இருந்தார்கள். இந்தியாவில் முடக்கப்பட்டதால் தளம் ஆட்டம் கண்டு விட்டது. உடனே தளத்தை நிர்வகித்து வந்தவர்கள் ‘சேவ் சவிதா’ (சவிதாவை காப்பாற்றுங்கள்) என்றொரு அமைப்பை இண்டர்நெட்டில் நிறுவி, இந்திய அரசுக்கு எதிராக போராடத் தொடங்கினார்கள்.

“ஆயிரக்கணக்கான செக்ஸ் தளங்கள் இந்தியாவில் காணக்கிடைக்கையில் சவிதாபாபிக்கு மட்டும் ஏன் தடை என்று இந்தியர்களில் யாராவது ஒருவர் தகவல் அறிமை உரியும் சட்டத்தைப் பயன்படுத்தி அரசை கேள்வி கேட்கவேண்டும். நாங்கள் ஐரோப்பாவில் இருப்பதால் இதுபற்றி இந்திய அரசிடம் பேசமுடியவில்லை” என்று தளத்தை நிர்வகித்து வந்ததாக கூறப்பட்ட தேஷ்முக் கேட்டுக் கொண்டார்.

இதுவரை தளத்தை ரசித்து வந்தவர்களாக இருந்தாலும், தடை என்றதும் பலரும் பதுங்க ஆரம்பித்தார்கள். சவிதாவுக்கு ஆதரவாக அரசை எதிர்த்து யாரும் சவுண்டு விட தயாராக இல்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் பொறுத்துப் பார்த்த நிர்வாகம் பூனைக்குட்டி மாதிரி நைசாக வெளியே வந்தது. புனீத் அகர்வால் என்பவர் தளத்தை தான் நடத்தி வந்ததாக ஒத்துக் கொண்டார். சவிதாபாபி தளத்தின் சேவைகளை உடனடியாக நிறுத்திக் கொள்வதாக அறிக்கையும் விட்டார். இவர்தான் தேஷ்முக் என்ற பெயரில் தளத்தின் நிர்வாகியாகவும், கதையாசிரியராகவும் இருந்தவர்.

“சவிதாபாபியின் சொந்தங்களே! கனத்த இதயத்தோடும், கண்களில் வழியும் கண்ணீரோடும் சவிதாபாபி தளத்தின் சேவைகளை நிறுத்திக் கொள்கிறேன். இதுவரை ஆதரவு கொடுத்த வந்தவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை. சொந்த குடும்பப் பிரச்சினைகளால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்!” என்று செண்டிமெண்டலாக அறிக்கை விட்டு தப்பித்துக் கொண்டார். கொஞ்சநஞ்ச நம்பிக்கையோடு மீண்டும் சவிதாபாபி வருவாள் என்று ஆவலோடு ஜொள்ளு விட்டு, கணினி மேல் விழிவைத்து காத்திருந்தவர்கள் நொந்துப் போனார்கள்.
சவிதாபாபியின் சகாப்தம் இந்த ஜூலை மாதத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது.

செக்ஸ் தளங்கள் எதுவும் இந்தியாவிலிருந்து அனுமதி பெற்று செயல்பட முடியாது. அதே நேரம் அயல்நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கான தளங்கள் அஜால் குஜாலாக , புதிது புதிதாக, புற்றீசல் மாதிரி தொடங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சவிதாபாபியின் வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, குறிப்பாக இந்தியப் பெண்களை ஆபாசமாக சித்தரித்து ஏராளமான தளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் இணையத் தளங்கள் இவ்வகையில் இருப்பதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கிறது. இவற்றில் மூவாயிரம் தளங்கள் தொடர்ந்து கொலைவெறியோடு இயங்கி வருகிறது என்பது முக்கியமானது. ஒரு சவிதாபாபியை முடக்கிவிட்ட இந்தியா, மீதியிருக்கும் முப்பதாயிரத்து சொச்சம் தளங்களை என்ன செய்யப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

நம்ம ஊரில் கூட சில வருடங்களுக்கு முன்பாக பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையத்தளங்களில் பிரசுரித்ததாக கூறி ஒரு டாக்டர் கைதானார். அவர் மேல் பல பிரிவுகளிலு வழக்கு தொடரப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கிறார். எல்லாம் ஓக்கே. ஆனால் அவர் நடத்தி வந்த இணையத்தளம் இன்னமும் வெற்றிகரமாக நடந்துகொண்டு தானே இருக்கிறது? டாக்டர் எடுத்த செக்ஸ் படங்கள் இன்னமும் அத்தளத்தில் இருக்கத்தானே செய்கிறது? காரணம். அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படும் தளம் அது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அனுமதி பெற்று செக்ஸ் தளங்களை நடத்திக் கொள்ளலாம். இண்டர்நெட் பாவிப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் பன்மடங்காக பெருகி வருவதால், இந்தியர்களை குறிவைத்து அயல்நாடுகளில் இருந்து ஆபாசத்தளங்களை நடத்தி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்தத் தளங்களை இங்கே இருப்பவர்கள் பார்வைக்கு தடை செய்வதுதான் இதற்கிருக்கும் ஒரே தீர்வு. அப்படியில்லாமல் ஏதோ ஒரு தளத்தை அப்போதைக்கு தடை செய்து, ஆயிரம் தளங்களை சுதந்திரமாக விட்டு வைத்திருப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.

வளைகுடா நாடுகளில் வழங்கப்படும் இண்டர்நெட் சேவையில் இப்பிரச்சினைக்கு சரியான முன்னுதாரணம் உண்டு. அந்நாடுகளில் ஆபாச இணையத்தளங்களை பயனாளர்கள் பாவிக்க முற்றான தடை உண்டு. இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களே இணையத்தளங்களை வடிகட்டி அனுப்புவதால் தடை வெற்றிகரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவும் வளைகுடா நாடுகளை இவ்விஷயத்தில் பின்பற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய நேரமிது.

சௌரவ் கங்குலி

சௌரவ் கங்குலி (ஜூலை 081972) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர். இடதுகைத் துடுப்பாளரான கங்குலி 1996 இல் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். தன் முதலிரு போட்டிகளிலும் இங்கிலாந்துக்கு எதிராக சதங்களைப் பெற்றார். 2000முதல் 2005 வரை இந்திய அணியின் தலைவராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களையும் டெஸ்ட் போட்டிகளில் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களையும் பெற்றுள்ளார். 2004- ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது கங்குலிக்கு வழங்கப்பட்டது.


எப்போதும் சக வீரர்களை உற்சாகப்படுத்தி,அணியின் வெற்றிக்கு தூண்டுகோலாக இருந்து வந்த சவுரவ் கங்குலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்றுடன் விடைபெறுகிறார்.

வங்கப்புலி, தாதா, கொல்கத்தா இளவரசர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கங்குலிக்கு இன்று முக்கியமானதொரு நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்றுடன் அவர் ஓய்வு பெறுகிறார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த 36 வயதாகும் இடது கை பேட்ஸ்மேனான கங்குலி,1992-ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த ஒருநாள் போட்டியின் மூல சர்வதேச கிரிக்கெட்டில் கால் தடம் பதித்தார்.

தனது கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தை 1996-ல் அவர் தொடங்கினார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 112 போட்டிகளில் பங்கேற்று 7127 ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் 16 சதம், 34 அரை சதம் அடங்கும்.

ஒருநாள் போட்டிகளில், 22 சதம், 72 அரைசதத்துடன் 11,363 ரன்களைத் தொட்டுள்ளார் கங்குலி. இதுதவிர ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 132 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

திறமையை வெளிப்படுத்தி, வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததால், இந்திய அணியின் கேப்டன் பதவி அவரைத் தேடி வந்தது.

சக வீரர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி அணியின் வெற்றிக்கு தூண்டுகோலாக இருந்து வந்த சவுரவ் கங்குலி, இந்திய அணிக்கு அதிக வெற்றிகளைத் தேடித் தந்த கேப்டன் என்ற பெருமையும் அதன் மூலம் பெற்றார்.

நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4 ஆவது நாளான நேற்று, கடைசி முறையாக பேட்டிங் செய்யக் களமிறங்கிய கங்குலிக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது.இதில் அவர் டக்- அவுட் ஆகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

மைதானத்தில் உத்வேகத்துடனும், உணர்ச்சி பூர்வமாகவும் விளையாடிய வந்துள்ள கங்குலி, தனது கடைசி நிமிடம் வரை அந்த பாதையில் இருந்து விலகாது ஒரு வெற்றி வீரராகவே திகழ்ந்தார்.