போபால் விஷவாயு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான வாரண் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர சிபிஐ.,க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
1984-ல் ஏற்பட்ட போபால் விஷவாயு சம்பவத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக ஊனமடைந்தனர். இந்த சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
அவரை இந்தியாவுக்கு கொண்டு வர சிபிஐ முயன்று வருகிறது. இந்நிலையில், அதுதொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மூலம் முன்வைக்க சிபிஐ.,க்கு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
தில்லி முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இதுதொடர்பான மனு நீதிபதி வினோத் யாதவ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "போபால் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை கணக்கில் கொண்டும், நீதியின் நலன் அடிப்படையிலும், ஆண்டர்சனை நாடு கடத்துவது சரியானது என்று கருதுகிறோம். எனவே, அவரை இந்தியாவுக்கு கொண்டு வர எந்த தடையும் இல்லை. இதில், சிபிஐ.,யின் கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது."" என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment