ஐயாவையும் பிடிக்கும், அம்மாவையும் பிடிக்கும் என்று மஞ்சள் கோடு தாண்டாமல் வண்டி ஓட்டியவர் மதுரைப் புயல். நேற்று இந்தப் புயல் கரை கடந்தது. இந்த மாற்றத்துக்கான காரணம் அவரது மதுரை எதிரி அம்மா பக்கம் சாய்ந்தது என்று சொல்லிக் கொண்டாலும் புயலை ஐயா பக்கமாக வீச வைத்தவர் அஞ்சாத மனம் படைத்தவர்தானாம்.மதுரை ஹீரோ வெற்றி பெற்றால் அது மதுரையை மையமாகக் கொண்டு திகழும் அஞ்சாதவருக்கு கொஞ்சம் இழுக்குதான். இதனால் மதுரை மைந்தன் என்ற ஹீரோவின் இமேஜை உடைக்க அதே ஊரைச் சேர்ந்த புயலை களம் இறக்கிவிட்டிருக்கிறார் என்கிறார்கள். புயல் ஆலயத்துக்கு வந்ததற்கான பின்னணி இதுதான் எனகிறார்கள் புன்னகையுடன்.
No comments:
Post a Comment